Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏப்ரல் 5ம் திகதி (திங்கட்கிழமை) தமிழ்வின் இணையத்தளத்தில்வழி தெரியாமல் வழி காட்டும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புஎன்ற தலைப்பில் ஜோய் தனபாலன் என்பவருடைய செய்தியை வெளியிடும் பொழுது பிரான்ஸ் ஈழத் தமிழர் பேரவையின் சின்னம் அந்தச் செய்தியில் போடப்பட்டிருந்தது.

சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டுச் சட்டங்களுக்குஅமைவாக இயங்கும் அமைப்பு தனது உத்தியோகபூர்வ செய்தியையே தனது சின்னத்துடன் வெளியிட முடியும். ஆனால் தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஜோய் தனபாலன் என்கின்ற தனிநபரின் செய்திக்கு பிரான்ஸ் ஈழத் தமிழர் பேரவையின் சின்னத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்தியிருப்பது முறைகேடான செயல் என்பதனை எமது அமைப்பின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதுடன், இனி வரும் காலங்களிலும் இவ்வாறான செயல்களை யாரும் மேற்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

எனவே குறிப்பிட்ட செயலை தன்னிச்சையாக மேற்கொண்டது மட்டுமன்றி அமைப்பின் சின்னத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக பிரான்சு இணையத்தளங்களுக்கான சட்டங்களுக்கு அமைவாக சட்டரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளோம் என்பதனை சம்மந்தப்பட்டவர்களுக்கும், மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

நன்றி

திருச்சோதி.தி

தலைவர்

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

தொடர்பு: 06 15 88 42 21

0 Responses to சின்னத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக சட்டநடவடிக்கை: பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com