தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு - பிரான்சுபரிஸ் - 07.07.10
இன்று இணையத்தளங்களில் பொறுப்பற்ற முறையில் தனி மனிதர்கள் எல்லாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தேடி தம்மை சமூக அமைப்புக்கள் போல் காட்டிக்கொண்டு பல அறிக்கைகளை விடுகின்றனர்.
தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் 64 சங்கங்களை ஒன்றிணைத்து கடந்த பல வருடங்களாக பிரான்சில் சமூகப்பணி செய்து வருகிறது. இதை அறியாத ஒரு நபர் திரு சம்பந்தனுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கைகள் விடுவதோடு தமிழச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையை கேலி செய்துள்ளது.
இது அவரின் அரசியல் வரட்சியையும் அறியாத்தன்மையும் வெளிக்காட்டுகிறது. இப்படியானவர்களுடன் திரு.சம்பந்தன் அவர்கள் தொடர்பு கொண்டுவிட்டு புலம் பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதாகவும், அவர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அங்கு பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு தமது பக்கத்தை நியாயப்படுத்துகிறார்.
ஆனால் இங்கு உண்மையாக செயற்படும் கட்டமைப்புக்களுடன் தொடர்பு கொள்ள மறுக்கிறார். அண்மையில் உலகத்தமிழர் பேரவை (GTF) இன் தலைவர் மதிப்பிற்குரிய அருட்தந்தை இமானுவேல் அடிகளார் அவர்கள் தமிழர் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியையும் ஒன்றாக சந்தித்து ஒரே அணியாக்க முற்பட்ட போது பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இப்படியாக வார்த்தை தவறும் தலைமையை ஏற்பதற்கு பிரான்சில் உள்ள தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பு தயார் இல்லை என்பதோடு எமது கொள்கையை முன்வைத்து தேர்தலில் நிற்கும் சைக்கிள் சின்னத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறது.
ஒரு சில இணையத்தளங்களில் தனிநபர்கள் தனிநபர்கள் மக்களால் அறியப்படாத அமைப்பின் பெயரில் விடப்படும் அறிக்கைகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அவ் அறிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து அதனைப் பிரசுரிக்கும் போது அவர்களுடைய நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தவறான தகவல்கலை வெளியிடும் இணையத்தளங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எமக்கு எதிரா கருத்தை பிரசுரிக்கும் முன் அவ் இணையத்ளம் எம்முடன் தொடர்புகொள்ளவில் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின்
தலைவர்
ப.பாலசுந்தரம்



0 Responses to தவறான தகவல்கலை வெளியிடும் இணையத்தளங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்