கருணா மற்றும் கே.பி.க்கு ஜெனரல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்யவேண்டிய தேவை ஒன்று உள்ளது என்றும், அந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில் மகிந்தவின் அரசு செயற்படுகிறது என்றும் பொன்சேகாவின் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.பொன்சேகாவின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் செயலாளர் விஜித ஹேரத்தே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
அரசில் உள்ள அரசியல்வாதிகளை விடவும் ஜெனரல் சரத் பொன்சேகாவே புலிகளின் முதல் இலக்காக இருந்தார். அதனால்தான் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் அவரைக் கொலை செய்ய முற்பட்டனர். தேசத்தின் அதிஷ்டம் காரணமாக அவரின் உயிர் பிழைத்தது. புலிகளை ஒழித்துக்கட்டினார்.
இருப்பினும், பொன்சேகாவை எப்படியாவது இல்லாது ஒழிக்கவேண்டிய தேவை கருணா அம்மான் மற்றும் கே.பி. போன்றவர்களுக்கு உள்ளது. அவர்களின் தேவையை நிறைவேற்றும் விதமாகவே அரசு செயற்படுகிறது. கே.பியின் விருப்பத்துக்கு ஏற்ப அரசு செயற்படுகிறது என்றார்.



0 Responses to பொன்சேகாவை ஒழித்துக் கட்டும் தேவை கருணாவுக்கும் கே.பிக்கும் உள்ளது