Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழின உணர்வாளர் திரு சீமான் அவர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

தீவிர தமிழின உணர்வாளரான திரு சீமான் அவர்கள் எதிர்வரும் மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்கவுள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் நாள் இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் தோற்றகடிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நாளின் ஓராண்டு நிறைவில் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து ஈழத்தமிழ் மக்களுக்காக பல போராட்டங்களை மேற்கொண்டு வந்த திரு செபஸ்ரியன் சீமான் அவர்கள் தற்போது தமது புதிய அரசியல் கட்சியின் கொடியை வடிவமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

எதிர்வரும் மே 18 தமிழ் மக்களுக்கு ஒரு கறுப்பு நாள், தமிழ் மக்கள் அதனை இலகுவில் மறந்துவிட மாட்டார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.

தி.மு., .தி.மு. ஆகிய கட்சிகள் அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப திராவிடர்களை பாதுகாக்க தவறிவிட்டனர். எனவே அதனை மேற்கொள்ள நாம் முன்வந்துள்ளோம். அதுவே எமது நீண்டகாலத் திட்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அதிக பற்றுக்கொண்ட திரு சீமான் திரைப்பட இயக்குநராகவும் நல்ல தமிழ் படங்களை படைத்து வருபவர். நாம் தமிழர் இயக்கத்தின் மூலம் அவர் மிகப்பெரும் ஆதரவுகளை தமிழகத்தில் பெற்று வருகின்றார்.

நாம் பிரிவினைவாதிகள் அல்ல, ஆனால் தமிழ் மக்கள் நீதியாக நடத்தப்படவேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம் என சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை மேற்கொண்டதற்காக சீமான் தமிழக அரசினால் பல தடவைகைள் கைது செய்யப்பட்டதுடன், கனடா காவல்துறையினரும் அவரை நாடுகடத்தியிருந்தனர்.

0 Responses to தமிழின உணர்வாளர் சீமான் அவர்களில் புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் உதயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com