Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேசமயம் வடக்குகிழக்கில் சிறீலங்கா அரசு ஆதரவுகளை பெற்று வருகின்றது என கொழும்பு வாரஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

வடக்குகிழக்கில் அரசு மெல்ல மெல்ல தன்னை பலப்படுத்தி வருகின்றது. அதேசமயம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் அதனை உணர்த்தியுள்ளன.

பல தசாப்பதங்களுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வடக்குகிழக்கில் ஐந்து மாவட்டங்களில் அதிகாரத்தை பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு 22 ஆசனங்களை பெற்ற கூட்டமைப்பு தற்போது 14 ஆசனங்களை பெற்றுள்ளது. இதில் தேசியப்பட்டியல் ஆசனமும் அடங்கும்.

எனினும் யாழ்மாவட்டத்தில் அரச கூட்டணியில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தா 28,585 வாக்குகளை பெற்று முன்னனியில் உள்ளார். மாவை சேனாதிராஜா 20,501 வாக்குகளை பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது: கொழும்பு ஊடகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com