பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம். பொதுக்கூட்டத்தில் சீமான்,
’’இனி எங்க அம்மாவை திருப்பி வா என்று அழைத்தால் காரித்துப்பும். வருமா என்றுகூட தெரியவில்லை. இப்போது நடந்த கொடுமை அவருக்கு தெரியாது.
ஏனென்றால் அவருக்கு நினைவில்லை. நினைவு இருந்திருந்தால் அவர் இந்த தேசமே வந்திருக்கமாட்டார். அய்யா(பிரபாகரன் தந்தை) செத்தது கூட இன்னும் அம்மாவுக்கு தெரியாமல் இருக்கிறது.
அப்படி நினைவில்லாதவரைத்தான் இந்த தேசம் திருப்பி அனுப்பி இருக்கிறது.
ப.சிதம்பரத்திற்கு தெரியாமல் அம்மா திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை. அவர்தானே விசா கொடுக்க அனுமதித்தார். அப்புறம் ஏன் திருப்பி அனுப்பினார்.
சிங்கப்பூர்,மலேசியா என் தேசம் . என் இன மக்கள் வாழும் தேசம். அதனால்தான் அம்மாவை அரவணைத்து பார்க்கிறார்கள்.
இந்தியா மோசம். அதனால்தான் திருப்பி அனுப்பினார்கள்’’என்று பேசினார்.



0 Responses to நடந்தது எதுவும் தேசியத் தலைவரின் தாயாருக்கு தெரியாது: சீமான்