யாழ். மாவட்டத்தில் ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் முதலாவது இலக்கத்தில் போட்டியிடும் இராமநாதன் அங்கஜன் வெளியிட்ட விசேட அறிக்கை இது. இந்நாட்டில் நிலவிய சூழ்நிலையில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஒரு வழி காட்டியாக இருப்பதற்கு நான் இத்தேர்தலைப் பயன்படுத்துகிறேன். இதற்கு எமது மக்கள் தமது விருப்புக்களை 8ஆம் திகதி நடைபெற உள்ள வாக்களிப்பில் பயன்படுத்தவேண்டும் எனக்கூறி வருகின்றேன். இதனைப் பெரும்பாலான எமது சகோதர, சகோதரிகள் ஏற்று இருக்கின்றமையை நான் செல்லும் இடமெல்லாம் காணமுடிகிறது. இனிவரும் காலங்களில் எமது மக்கள் சுதந்திரமான தேர்தலைச் சந்திப்பதற்கு எனது தேர்தல் பிரசாரப் பணி பெரிதும் உதவியுள்ளது. இதனால் என் பின்னால் நிற்கும் மக்களின் பலம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.என்னைப்போன்ற இளைஞர்கள் இனி மேல் சுதந்திரமாக தேர்தல்களைச் சந்திக்க வேண்டும் என்பதை நிரூபிப்பதற்கே நான் இக்களத்தைச் சந்திக்கின்றேன். எனக்குப் பின்னால் வயது வித்தியாசம் இன்றி எமது மக்கள் அணிதிரண்டு வருகின்றமை என்னை உற்சாகப்படுத்துகின்றது.
இனிவரும் காலங்களில் தேர்தல்களில் ஆயுத கலாசாரம் இல்லாமல் இருப்பதற்கு இம்முறை சாவுமணி அடிக்கப்பட வேண்டும். அதற்காக ஏப்ரல் 8ஆம் திகதி நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் விதையாக விதைக்கப்பட வேண்டும். அந்த விதை ஏப்ரல் 9ஆம் திகதியில் இருந்து முளைத்து பெரிய ஆலமரமாக வளர்ந்து எமது சமுதா யத்திற்கு ஆனந்தம், அன்பு, கருணை நிறைந்த மக்கள் வெள்ளமாக வளர்ந்து, எமது மண்ணை நேசிக்கும் கரங்களாக மாறவேண்டும்.
இந்த நிலைமை உருவாகின்றமையைப் பொறுக்க முடியாத தீய சக்திகள் கடந்த சில நாள்களாக எம்மை இம்மண்ணில் இருந்து அகற்றப் பார்க்கின்றன. எங்களை அகற்றுவதற்குப் பலவிதமான உத்திகளைப் பயன்படுத்துகின்றன. நமது பலம், பெரும் சக்தியாக மாறிவிட்டதால் எனது உயிரைப் பறிக்கப் பார்த்தனர். அதுதான் கடந்த முதலாம் திகதி அதிகாலை 12.30 மணிக்கு யாழ். பருத்தித்துறை வீதியில் உள்ள இந்துமத குருமார் ஒன்றியத்திற்கு முன் னால் நடந்தேறியது.
அன்று ஜனாதிபதியின் வருகைக்காகத் துரையப்பா விளையாட்டரங்கை அலங்கரித்துவிட்டு வரும் வழியில் பார ஊர்தியில் வந்த ஆயுதக் கலாசாரப் பின்னணி கொண்ட குழுவினர் ஆயுதத்துடன் எம்மை வழிமறித்தனர். உடனடியாக இம்மண்ணில் இருந்து வெளியேறுமாறும் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகி விடுமாறும் எனது தலையில் துப்பாக்கியை வைத்த படி அச்சுறுத்தினர். அத்துடன் தேர் தல் பணியில் ஈடுபட்டிருந்த எமது தொண் டர்கள் எண்மர் தாக்கப்பட்டு, அவர்களில் மூவர் சிறைப்பிடிக்கப்பட்டனர். எனது வாகனம் எரிக்கப்பட்டது. தெய்வாதீனமாக நான் காப்பாற்றப்பட்டேன்.
இந்த நேரத்தில் அவர்களது வாகனமே எம்மைச் சுற்றி வளைத்து, தாக்கியமையை அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ், இராணுவ அதிகாரிகள் நன்கு அறிவர்.
அத்துடன் எமது சிறைப்பிடிக்கப்பட்ட தொண்டர்கள் இந்த மண்ணை விட்டு அகலவேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டதால் அவர்களை நாங்கள் உயிர் ஆபத்திலிருந்து காப்பாற்ற கொழும் பிற்கு அனுப்பியுள்ளோம்.
இந்த நிலையை நான் மிகவும் தெளி வாகத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அரா ஜகப் போக்குகளை நீங்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்து இனிவரும் சந் ததியை இம்மண்ணில் சுயகௌரவத்து டன் வாழ வைக்க என்போன்ற சகோதரர் களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சாவகச்சேரியில் எமது சகோதரர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம், எமக்கு நடந்தது போன்று காரைநகரில் நடந்த தாக்குதல் சம்பவம், கடந்த முதலாம் திகதி யாழில் எமக்கு நடந்த சம்பவம் போன் றவை யாரால் இங்கு அரங்கேற்றப்பட்டன என்பதை எம்மக்கள் நன்கறிவீர்கள். இதன் பிரதிபலிப்பை 8ஆம் திகதி உறுதி செய்யும்போது, இந்த அராஜகக் கும்பல்கள் இந்த மண்ணை விட்டு ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதை அறிந்து மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை நாம் அறிவோம்.
முதலாம் திகதி அதிகாலை இடம் பெற்ற சம்பவம் சம்பந்தமாக நாம் சட்டத் தின் உதவியை நாடி உள்ளோம். அந்தச் சம்பவத்தை நாம் அரசு சார்பான வர்கா ளாக இருந்தாலும் கூட உடனே சட்டத்தை மதித்து, பொலிஸில் முறைப்பாடு செய் தோம். ஆனால் இன்றைய யாழ். மேயரோ அவர் பொலிஸில் முறைப்பாடு செய்யாது அமைச்சருக்கு முறையிட் டிருக்கின்றார் எனக்கூறியுள்ளார். இதிலிருந்து யாழ். மேயர் சட்டத்தை மதிக்கத் தவறிவிட்டார் என்று புலனாகிறது. எந்தக் கட்சியினராக இருந்தா லும் சட்டத்தின்படி நடக்க வேண்டிய பொறுப்பு மேயருக்கு உண்டு. எமக்கு எதி ரான மேயரின் கூற்றுக்களுக்கு நாம் விரை வில் சட்டத்தின் உதவியுடன் அதற்கான நடவடிக்கை எடுப்போம்.
பத்திரிகை மூலம் எமக்கு எதிராக அவர் வெளியிட்ட அபவாதச் செய்திக்காக நீதி மன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உண்மை நிலையை வெளிப் படுத்துவோம்.
என்னைப் பொறுத்தவரை நான் இது வரையும் அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலுக்கு நான் தகுதியானவன். வெளி நாட்டில் உயர் கல்வியைக் கற்று பண் பாடாக வளர்ந்த நானோ, என்னைச் சார்ந்த வர்களோ பெண் மேயரைத் தாக்கினோம் என்று வெளியான செய்தி எம்மைப் பெரி தும் பாதித்துவிட்டது. மேயரின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
எமது மக்கள் தலைநிமிர்ந்து வாழவே எனது உயிரையும் துச்சமென மதித்து இன்று உங்களுடன் இணைந்து கொள் கின்றேன். எமது மக்களின் ஆயுதமற்ற கரங் களைப் பலப்படுத்த 8ஆம் திகதி அதி காலையிலேயே சென்று வாக்களிக்குமா றும், சகலரையும் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட் டுக் கொள்கிறேன்.
இன்றைய இளம் சந்ததியினரைக் காப் பாற்ற, இன்றைய தேர்தலில் மக்கள் வாக்கு களை ஆயுதமாகப் பயன்படுத்தி, என்னுடன் அணிதிரண்டு வருமாறு அன்புடன் அழைக் கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.



0 Responses to மகிந்தவின் வேட்பாளர்களுக்கும் டக்ளசின் வேட்பாளர்களுக்கும் இடையில் முறுகல் முற்றியது!