இக்காலம் வரையிலும் சுமார் முப்பது வருடங்களாக தமிழ்மக்களால் சம அந்தஸ்த்துக் கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த ஜனநாயக ரீதியிலானசகல அரசியல் போராட்டங்களினது உச்ச வடிவமே இந்த தீர்மானம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இத்தீர்மானத்தின் மூலம் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையை உடையவர்கள் என்பதைஉறுதிப்படுத்துகின்றனர். 1976 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைத் தொடர்ந்து 1977 ஆம்ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமோக வெற்றியடையச் செய்ததன் மூலம் இத்தீர்மானத்திற்கான தமது ஆதரவை தமிழ் மக்கள் ஆணையாக வழங்கினர்.
இதேர்தலே தமிழர் தாயகத்தில் இறுதியாக நடந்த சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த ஆயுதப் போராட்டம் எமது சுதந்திரத்திற்கான போராட்டத்தை அடுத்த கட்டமாக புலம் பெயர் ஈழத்தமிழரிடம் கையளித்திருக்கிறது.
அந்த வகையில் சர்வதேசமெங்கிலும் புலம்பெயர்ந்துவாழும் ஈழத்தமிழர் தாம் வாழும் நாடுகளில் இச் சரித்திரப் பெருமை வாய்ந்தவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை நடாத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி,சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்களின் எகோபித்த ஆதரவோடு நடாத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பு அவுஸ்த்திரேலியாஉட்பட இன்னும் பல நாடுகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அவுஸ்த்திரேலியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் 17ஆம்,18ஆம் தேதிகளில் இக்கருத்துக்கணிப்பு இடம்பெற ஏற்பாடாகி யிருக்கின்றது. இந்தச் சரித்திரப் பெருமை வாய்ந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்பதன் மூலம் ஈழத்தமிழராகிய எமது ஒரே இலட்சியமும், விருப்பமும் சுதந்திரத் தமிழீழத் தனி நாடுதான் என்பதை மீண்டுமொருமுறை உரக்கச் சொல்லுவோம்.
தாயக உணர்வுடன் திரண்டு வருவோம், இத்தீர்மானத்தை வெற்றிபெறச் செய்வோம். இத்தீர்மானம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தையோ அல்லது தன்னார்வத் தொண்டர் களையோ தொடர்பு கொள்ளுங்கள்.




0 Responses to அவுஸ்திரேலியாவில் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான கருத்துக்கணிப்பு