இத்தேர்தலில் நிற்க விரும்புவோர் உடனடியாக கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடனோ, மிஞ்னஞ்சல் ஊடாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கின்றோம்.எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம் உயிரற்ற சடங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை, விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களை புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக்கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகின்றது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்
தமிழீழ தேசியத்தலைவர்
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும் தமிழ்மக்கள் தமது தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரம் கோரும் போராட்டத்தை கைவிட முடியாது. எம்மக்களும் தன் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கனவுடன் தம் இன்னுயிகை; கொடுத்த மாவீரர்களும் அவர்களுடன் நின்று தம் உயிரை கொடுத்த மக்களும் முள்ளிவாய்காலில் எம்மிடம் ஒரு செய்தியை தந்துவிட்டு சென்றிருக்கின்றார்கள்.
இந்த பேரழிவுக்கு பின் எமது மக்களுக்கு ஒரே நம்பிக்கை புலம்பெயர் மக்களே!
டியாஷ்போறா (Diaspora) என்று சொல்வார்கள். உலக விடுதலைப்போராட்டங்களில் டியாஸ்பொறே என்று அழைக்கப்படும் புலம்பெயர் மக்களே பல நாடுகளில் தமது நாட்டின் விடுதலைக்கு தளமாக இருந்திருக்கின்றார்கள் எரித்திரியா (Eritriea) ஈஸ்ட்தீமோர் (East Timor ) இஸ்ரேல் (Israel) கொசோவா (Kosovo) அயர்லாந்து (Ireland) போன்ற நாடுகள் இதற்கு உதாரணம். அதே நேரத்தில் இன்னும் விடுதலைக்காக வேண்டிநிற்கும் எம்மைப்போன்ற பல இன மக்களுக்கும் இதே டியாஸ்பொறே மக்களே வடிகாலாக இருக்கின்றார்கள். பாலஸ்தீனம (PALESTINE) தீபெத் (Tibet) ஓஇகோர் (Ouighour) போன்ற இன மக்களின் போராட்டம் இதற்கு உதாரணம்.
இன்று நாம் பலம் வாய்ந்த தேசியகட்டமைப்புகளை எல்லா புலம்பெயர் நாடுகளிலும் உருவாக்க வேண்டிய கட்டயமான காலகட்டத்தில் இருக்கின்றோம். நாம் வாழும் நாடுகளில் அந்நாட்டு அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதும், இந்நாட்டு மக்கள் எமது போராட்டத்தை புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்திலும் இருக்கின்றோம் எமது மக்களின் சனநாயக அரசியல் விருப்பு என்ன என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதையே எம்மக்கள் தமிழரின் தாயக விருப்பை பிரான்சிலும் பல உலக நாடுகளிலும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
மக்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த போராட்டத்தை சரியான வழிகளில் சரியானவர்களை தெரிவு செய்யவேண்டியது மக்களே!
நாம் பழைய அரசியல்வாதிகள் போல் மக்களை அணுகக்கூடாது நாம் மக்களை வித்தியாசமாக அணுகவேண்டும். மக்களுக்கு உண்மைநிலையை விளக்கவேண்டும். பொய்யான நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை நாம் மக்களுக்கு வழங்க கூடாது. நாம் எதற்காக போரடுகின்றோம்- நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதையெல்லாம் நாம் மக்களுக்கு எடுத்து விளக்க வேண்டும். உண்மை நிலையை எடுத்து விளக்கும் பொழுதுதான் மக்கள் எம்மீது நம்பிக்கை கொள்வார்கள் என்பது எம் தேசியத்தலைவர் கூற்று.
இன்று எமது போராட்டம் உலகப்பரிமானம் பெற்று உலகத்தின் அத்தனை நாடுகளின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாயக்காலின் தொடர்ச்சியாக உருவாக்கம் கண்ட பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பலநாட்டு தேசிய அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து உலகத்தமிழர் பேரவை உருவாக்கம் பெற வழிவகுத்ததும், பெப்ரவரி மாதாம் இங்கிலாந்து பாராளமன்றத்தில் தமது இரண்டாவது அமர்வை செய்ததும் பிரான்சு பாரளமன்றத்திலும், ஐரோப்பிய பாரளமன்றத்திலும் பலஅரசியல் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு எமது நாட்டில் நடைபெற்ற பேரழிவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி கோரிக்கை வைத்த போது பன்னாட்டு ஐரோப்பிய பாராளமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தார்கள்.
அத்துடன் சிறையில் பல வருடங்களாக எந்தவித விசாரணையுமின்றி இருக்கும் எமது உறவுகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் பேரழிவுக்கு பின் சரண் அடைந்த 12000 க்கும் மேலான போராளிகள் விடுதலை செய்யப்படவும் அல்லது நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் அல்லது தமிழர்நிலங்களை பாதுகாக்க ஐ.நாவின் தலைமையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இன்று சனநாயகத் தேர்தலை புறக்கணித்து நிற்கும் எமது மக்களின் சனநாயக விருப்பை கண்டறிய இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடம் ஐ.நாவின் மேற்பார்வையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற விண்ணப்பத்தினையும் அளித்திருந்தோம்.
முள்ளிவாய்க்கால் பேரழிவில் அழிக்கப்பட்ட எமது அரசின் தேசிய அரசியல் கட்டமைப்புக்களை நாம் வாழும் நாடுகளில் உலக சனநாயக கட்டமைப்புக்கமைய உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம். அந்த தேசிய கட்டமைப்பின் உருவாக்கத்தில் ஒண்றினைந்து மக்கள்படையாக எல்லா நாடுகளின் கதவுகளையும் தட்டி எமது தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவோம்.
நீங்களும் தேர்தலில் நின்று மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். இனிவரும் காலத்தை எம்மக்களுக்கான காலமாக மாற்ற உதவுங்கள். எமது செயல்பாடுகளை கண்டு எம்தாய்நாட்டு மக்கள் எம்மை பார்த்து சந்தோசமும் பெருமையும் கொள்வார்கள்
பிரான்சை பிரதேசவாரியாக பிரித்து நடக்கும் தேர்தலில் உருவாகும் பிரதேச சபையின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
தமிழர்கள் நாம் இன்று அனைவரும் அரசியல் செய்ய வேண்டியகாலகட்டத்தில் இருப்பதால் புலத்தில் உருவாகும் எமது தேசிய ரீதியிலான கட்டமைப்பை வலுவாக்குவோம். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேட்பாளர்களாக இத்தேர்தலில் நின்று உங்கள் அரசியல் அமைப்புக்களை உருவாக்க முன்வாருங்கள்.
தமிழீழ மக்கள் பேரவையின் தேர்தலில் வேட்பாளர்கள் பிரதேசவாரியாக தெரிவு செய்யப்படும் விபரம்
1.Paris ( 75 ) 4 பேர்
2. Seine et marne ( 77 ) 5 பேர்
3. Yvelines ( 78 ) 5 பேர்
4. Essone ( 91 ) 5 பேர்
5. Haut de Seine ( 92 ) 5 பேர்
6. Seine Saint Denis ( 93 ) 9 பேர்
7. Val de marne ( 94 ) 5 பேர்
8. Val de Oise ( 95 ) 5 பேர்
9. Oise ( 60 ) 2 பேர்
வெளிமாவட்டங்கள்
பிரான்சின் வடக்கு, வடகிழக்கு பகுதியில் வாழும் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் 03 பேர்
Alsace மாநிலத்திலிருந்து 04 பேர்
Rhone Alpes பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 04 பேர்
தென் கிழக்கு பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 05 பேர்
Sud West 05 பேர்
Centre 04 பேர்
• ஓவ்வொரு பிரதேச சபைகளும், தமது பிரதேசத்தில் வாழும் மக்களுடனான தொடர்புகள் மற்றும் அரசியல்கட்சிகளுடனான தொடர்பாளராகவும் இருப்பர்.
• பிரதேசசபையில் தெரிவு செய்யப்படுபவர்களில் அதிக வாக்குகளை பெற்ற ஒன்றிலிருந்து மூன்று பிரதிநிதிகள் தமது மாநிலங்களில் உள்ள தமிழீழ மக்களின் எண்ணிக்கைக் கேற்ப பிரான்சு நாட்டு தேசிய சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்
• தமிழீழ மக்கள் பேரவையின் பிரான்சு பிரதேசசபையில் 70 பேரும்,
• தேசிய சபையில் 29 பேரும் இருப்பார்கள்.
வரப்போகும் தமிழீழ மக்கள் பேரவைத்தேர்தலில் உங்களையும் பிரதிநிதிகளாக்கி கொண்டு இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எமது சனநாயக கட்டமைப்பின் மூலம் உருவாக்கம் பெறும் தமிழீழ தேசிய அமைப்புக்களின் மூலம் எமது தேசத்தை வலியுறுத்துவோம்.
நாட்டிலே இன்று உருவாகியிருக்கின்ற புதிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாம் பிரான்சில் ஒரு பலமான அரசியல் கட்டமைப்பினை புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற வகையில் வளர்த்தெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
இந்த அரசியல் கட்டமைப்பு பிரான்சில் வாழுகின்ற தமிழீழ மக்களை அரசியல் வேலைத்திட்டங்களுக்கு உரிய முறையில் நிறுவனரீதியாக வளர்த்தெடுத்து தாயகத்திலே எமது மக்கள் நியாயமான போராட்டத்திற்கு தமிழர் அல்லாத மக்களின் தார்மீக ஆதரவை வென்றெடுப்பதுவும், இந்த நாட்டின் அதிகார பீடத்தோடு தொடர்ச்சியான திட்டமிட்ட வேலைத்திட்டத்தூடாக அவர்களின் ராஐதந்திர ரீதியான ஆதரவை வென்றெடுத்து செயற்படுவதற்கும் உரிய முறையில் நேர்த்தியாக திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது.
சனநாயகம் வெளிப்படைத்தன்மை சட்டத்திற்குட்பட்ட செயற்பாடு பொறுப்புகூறும் தன்மை அடிப்படை (மக்கள்) அரசியல் தளத்திலிருந்து கட்டியெழுப்புதல் பரஸ்பர மரியாதை கலந்து பேசி கூட்டாக முடிவெடுத்தல் போன்றவற்றை இந்தக் கட்டமைப்பு அடிப்படைவிழுமியங்களாக கொண்டிருக்கும்;. முடிவெடுக்கும் வழிமுறையை பல்வேறு மட்டத்தில் உள்ள மக்கள் கட்டமைப்புகளுக்கு பாரப்படுத்தப்படும். இந்த கட்டமைப்பினால் பிரான்ஸ் வாழ்கின்ற தமிழ் மக்களை ஒரு வலிமைமிக்க சமூகமாக வளத்தெடுப்பதற்கு தேவையான சமூக வேலைத்திட்டங்களையும் உரிய முறையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும்.
உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களை வலிமை மிக்க சமூகமாக உயர்த்துதல். அதன் அடிநாதமாக தாயகத்தில் தேசியம் இறைமையுடன் கூடிய தன்னாட்சியை நிறுவுவது இதன் முக்கிய நோக்கமாகும்.
எமக்கென்று ஒரு நாடும், அரசும் இருந்ததும் அங்கே எமது மக்கள் சந்தோசமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மை, ஆனால் அந்த நாடு அழிக்கப்பட்ட நிலையில் அதை பறிபோய்விடாது பாதுகாப்பது எமது எல்லோரினதும் தலையாய கடமை, இன்று எமது போராட்டம் மக்களின் கையில் வழங்கப்பட்டுள்ளது. அதை வீரியமாக எடுத்து சென்று துன்பத்தின் எல்லையில் நின்று சுதந்திரத்தையே நம்பிக்கையோடு காத்து நிற்கும் எமது மக்களுக்கும், சிறைக்கம்பிக்குள் இருக்கும் எமது உறவுகளுக்கு கைகொடுப்பதோடு மட்டுமில்லாது எமது தேசியத்தையும் பாதுகாத்து, வளர்த்து, மீண்டும் எமது நாட்டை கட்டியெழுப்புவோம்
“ நாம் சுதந்திர மனிதர்களாக, எமது தலைவிதியை நமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தால்தான் கல்வி உட்பட சகல சமூக அமைப்புக்களையும் ஒரு உன்னதமான வளர்ச்சிப்போக்கில் உயர்த்தி நகர்த்தி செல்ல முடியும்’’
தமிழ்த்தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரம் பெறப்படும் வரை உரிமைப்போராட்டம் ஓயாது
தேர்தலில் நிற்கவிரும்பும் எல்லோரும் கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டுஇ அல்லது மின்னஞ்சல் ஊடக தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களையும் பெற்றுகொளும்படி கேட்டுகொளுகிறோம்.
வேட்பாளர்கள் பதிவு 20-04-2010 திகதி மலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்
தேர்தல் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எம்முடன் தொடர்புகொள்ளவும்.
Tel. 06 15 88 42 21
E mail. Mte.France@g mail .com
www.tamilelection.fr



0 Responses to பிரான்சில் நடைபெறவுள்ள தமிழீழ மக்களவைத் தேர்தல்