Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

மாவீரர் துயிலிடங்கள், மாவீர்களின் நினைவுச்சின்னங்கள், நினைவுத்தூபிகள், தமிர்களின் வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அவற்றை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிங்களக் கைக்கூலிகளால் இடித்தழிக்கப்பட்டன.

இந்த நிலையில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்புப் பகுதியில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட மகிந்தராஜபக்ச மற்றும் அரசின் கைக்கூலியான ஈபிடிபியின் தலைவர் மற்றும் குழுவினரது விளம்பரங்கள் ஒட்டப்பட்டு மாவீரர்களை இழிவு படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 Responses to துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com