Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் போர் முடிவடைந்த கடைசி காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை தலைவர் திருமதி நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஆரம்பமான .நா. மனித உரிமைகள் அவையின் 14 ஆவது கூட்டத்தொடரில் ஆரம் உரை நிகழ்த்தும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் போர் முடிவடைந்த பின்னர் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றபோதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் காத்திரமான நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு, நீடித்த நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நவநீதம்பிள்ளை, அந்த ஆணைக்குழுவின் முழுமையான நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதில் தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டாலும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்றும் அந்த நடவடிக்கையே பொது நம்பிக்கையும் அதற்கு அப்பாலும் விசாரணையின் உறுதித்தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவை வலியுறுத்துகிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com