வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயார் எனில், நாடாளுமன்றத்தில் அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான ஆதரவை வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெற்றுவரும் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பாகக் கருத்துக் கேட்ட போதே அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இணக்கமின்றி முடிபடைந்ததாகவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வட மாகாணச் சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாராக இருக் கின்றதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள இரா.சம்பந்தன், வடமாகாண சபையின் அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டிய தன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குத் தெளிவு படுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத் துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடியின் கீழ் இணையவிரும்பும் எந்தவொரு தமிழ்க் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ள சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிய சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்ற வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாம் ஏற்கும் தீர்வை முன் வைத்தால் அரசைக் கூட்டமைப்பு ஆதரிக்கும்: சம்பந்தன்