Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் ப்ரெஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பீரிஸ் அவர்களை கலந்து கொள்ள வேண்டாம் என மஹிந்தவின் ஆலோசகரால் கூறப்பட்டதாகவும் அதற்கு அமையவே பீரிஸ் உடனடியாக வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

பீரிஸ் அவர்களிடம் சில முக்கியமான கேள்விகளை இன்னசிற்றி பிரெஸ் உட்பட பலர் கேட்க தயாராக இருந்தனர். இந்த விடயம் நடந்தால் தாம் மாட்டிக்கொள்வோம் என பாலித கேகன்ன மஹிந்தவிற்கு செய்தி அனுப்பினார்.

இதனால் மஹிந்தவின் ஆலோசகர் ஊடாக பீரிஸ் அவர்களை இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தவேண்டாம் என கட்டளையிடப்பட்டது. முன்னதாக பாலித கேகன்ன அவர்கள் பீரிஸ் இற்கு இதுபற்றி கூறியதாகவும் ஆனால் பீரிஸ் பத்திரிகையாளர்களை சந்திப்பதில் உறுதியாக இருந்தாராம். இதன் பின்னரே பாலித கேகன்ன மஹிந்த ஊடாக இதனை நிறுத்தியுள்ளார்.

பாலித கேகன்ன இதனை நிறுத்த சொன்னமைக்கு காரணம். முன்னதாக பாலித கேகன்ன அவர்கள் இன்னெசிற்றி பிரெஸ் கேட்ட கேள்வி ஒன்றிற்கு முரண்பாடாக பதில் வழங்கி இருந்தார். அதாவது சரணடைகின்ற புலிகளுக்கு பாதுகாப்பு தொடர்பில் நம்பியார் அவர்கள் பாலித கேகன்னவுடனும், மஹிந்தவுடனும் கடந்த வருடம் மே 17,18 ஆம் திகதிகளில் பேசியதாகவும், அவ்வாறு பேசும் போது ஜனாதிபதியும், பாலித கேகன்னவும் சரணடைகின்றவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தால் அவர்கள் சாதாரண கைதிகள் போன்று நடத்தப்படுவதற்கு தாம் உறுதி தருவதாகவும் கூறியதாக நம்பியார் தனது அல் ஜசீரா தொலைக்காட்சி செவ்வியில் கூறியிருந்தார்.

ஆனால் அண்மையில் பாலித கேகன்ன மறுத்திருந்தார் அதாவது நம்பியாரிடம் ஜனாதிபதியோ அல்லது தானோ (பாலித) அவ்வாறு எதனையும் உறுதி கூறவில்லை என மறுத்திருந்தார். ஆனால் நம்பியார் உறுதி தந்ததாக கூறி இருந்தார். ஆகவே இது விடயத்தில் பீரிஸ் அவர்களிடம் விளக்கம்கேட்க பத்திரிகையாளர்கள் சிலர் தயாராக இருந்தனர். ஆகவே தான் இவ்வாறான கேள்விகளுக்கு பீரிஸ் பதிலளித்தால் மீண்டும் முரண்பாடுகளை ஏற்படுத்தி தாம் மாட்டுப்பட நேரிடலாம் என்றே பத்திரிகையாளர் சந்திப்பினை புறக்கணிக்க கட்டளையிட்டதாக கூறப்பட்டுள்ளது.

0 Responses to பீரிஸை பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்ற தடுத்ததன் பின்னணியில் பாலித கேகன்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com