மகிந்த ராஜபக்ச நியமித்துள்ள நல்லிணக்க ஆணையம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வோஷிங்டனில் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் காமினி லக்ஷ்மன் பீரிசுடன் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கருத்துரைத்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளின்ரன், சிறீலங்காவில் அரசியல் – இனத்துவ நல்லிணக்கம் ஏற்படுவதை தமது அரசாங்கம் உறுதியாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் சிறீலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணையம் நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், உள்நாட்டுப் போரை எதிர்நோக்கிய ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணையங்களின் படிப்பினைகளைப் பின்பற்றி சிறீலங்கா அரசின் ஆணையமும் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், போர்க்குற்றங்கள் தொடர்பாக மேலாளர் நிலையை ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்படும் நிபுணர்கள் குழு வகித்தாலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக எழக்கூடிய குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கிலாரி கிளின்ரன் அழைப்பு விடுத்துள்ளார்.
வன்னிப் போரில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான தமிழீழ மக்களை கொன்றுகுவித்த சிங்கள அரசை பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிறுத்தித் தண்டிப்பதை விடுத்து, இனத்துவ நல்லிணக்கம் என்ற போர்வையின் கீழ் சிங்கள அரசைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துலக சமூகம் செயற்படுவதையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0 Responses to சிறீலங்கா அரசு மீது அமெரிக்கா நம்பிக்கை!