Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேர்லின் மாநகரில் மே 18 அன்று சர்வதேச மனித உரிமை அமைப்பாகிய Amnesty International ஏற்பாட்டில் யேர்மனி பேர்லினில் அமைந்திருக்கும் சிறிலங்கா தூதரகத்தின் முன்னால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.
Amnesty அமைப்பினர்கள் பின்வரும் பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது கவனயீர்ப்பை மேற்கொண்டனர்:

1. இலங்கையில் மனிதஉரிமைகள் மதிக்கப்பட வேண்டும்!

2. போருக்குப் பின்னர் தப்பி வாழ்பவர்கள் இன்னும் எவ்வளவு காலம் நீதிக்காக காத்திருக்க வேண்டும்?

3. அனைத்துலக ஐக்கிய தேசிய சபையால் இலங்கையில் நடைபெறும் போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்!

4. மே 18 சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய கொடுர யுத்தத்தின் இறுதி நாளாகிய அன்று பல பேர்லின் வாழ் தமிழ் மக்களும் Amnesty International அமைப்புடன் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனும் தலைப்பில் இவ் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்துகொண்டனர்.

இவ் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் மக்களை பயமுறுத்தும் முகமாகவும் அத்தோடு அவர்களை இனம்கண்டு அடையாளப்படுத்துவதற்காகவும் தூதரகத்தின் உள்ளிருந்து நவீன படப்பிடிப்புக் கருவிகளால் ஒளிப்பதிவு செய்யப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

அத்தோடு இலங்கை தூதரகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கைக்கூலிகளும் தூதரகத்தின் முன்றலில் நிறுத்தப்பட்டனர். இங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் தமது கவனயீர்ப்பை இறுதிவரை முன்னெடுத்தனர்.

11.05.2010அன்று பேர்லினில் அமைந்திருக்கும் TU பல்கலைக்கழகத்தில் Amnesty International அமைப்பின் முன்னெடுப்பில்போர் முடிவுப்பெற்று ஒரு வருடத்திற்கு பின்னர்இலங்கையில் மனிதஉரிமைகள்எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிலும் இலங்கை தூதரகத்தின் சிங்கள கைக்கூலிகளும் அத்தோடு அவர்களுடன் இணைந்திருக்கும் ஓர் இரு தமிழ் கைக்கூலிகளும் கலந்து இந்த நிகழ்ச்சியை முறியடிக்கும் முகமாக செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெறும் உண்மை நிலவரத்தை தாங்கமுடியாத இவர்கள் இவ் கருத்தரங்கில் உரையாற்றிய யேர்மன் Amnesty International அமைப்பின் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதி Martin Wolf அவர்களையும், இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆராயும் Dr. Frank Florian Seifert அவர்களையும் அத்தோடு உலகத்தமிழர் பேரவையின் தலைவராகிய Prof. Dr. Pater S. J. Emmanuel அவர்களையும் தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்று பொய் பரப்புரை செய்தார்கள்.

இலங்கை தூதரகத்தின் பின்னணியில் செயல்படும் இவர்கள் தாங்கள் தூதரகத்தின் சார்பில் இங்கு கலந்துகொள்ளவில்லை என்று கூறினாலும் மே 18 அன்று நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் தூதரகத்தின் வளாகத்தில் நின்று தமிழ் மக்களை அவதானித்தவர்களாக இனங்காணப்பட்டனர்.



0 Responses to ஜோ்மனியில் ச. மன்னிப்புச் சபை ஏற்பாட்டில் இலங்கை தூதரகத்தின் முன்னால் கவனயீர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com