Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலிய நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும்நாடு கடந்த தமிழீழ அரசுதேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் தங்களின் தேர்தல் பரப்புரை காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த தேர்தலில் அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து வாக்கெடுப்பின்றி ஏகமனதாக பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 4 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் 6 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 4 தமிழின உணர்வாளர்கள் கூட்டணியில் போட்டியிடுகின்றனர்.

1. குலசேகரம் சஞ்சயன்

இவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட கால ஆதரவாளரும், புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டளரும் ஆவார். இவர் நீண்ட காலமாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளராக இருந்து மிகச்சிறந்த சமூகப்பணி ஆற்றியவர்.

2. பாலசிங்கம் பிரபாகரன்

இவர் அனுபவம் மிக்க சிரேஸ்ட தமிழ் ஊடகர். அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலியின் பணிப்பாளராக 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகப்பணியாற்றி தமிழுக்கும் தமிழீழ போராட்டத்துக்கும் வலுச்சேர்த்துவரும் தமிழின உணர்வாளர்.

3.தர்சன் குணசிங்கம்

தமிழ் இளையோர் அமைப்பின் துடிப்பு மிக்க இளைஞர் இவர்.தமிழீழ விடுதலைப்போரின் புலம்பெயர் செயற்பாடுகளில் முன்னின்று பணியாற்றும் இவர் கடந்த வருடம் சிட்னியில் நிகழ்ந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரத போராட்ட செயற்பாட்டாளன்.

4.சேரன் சிறிபாலன்

இவரும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்திறன் மிக்க கலைஞன். தனது நடனக்கலையினை தமிழுக்கும், அல்லலுறும் உறவுகளின் மறுவாழ்வுக்கும் அர்ப்பணம் செய்யும் கலை உணர்வாளன். கடந்த வருடம் 300கிலோ மீற்றர் நடைபயண போராட்டத்தில் பங்கெடுத்த இரு இளைஞர்களில் ஒருவர்.

இந்த நான்கு தமிழீழ செயற்பாட்டாளர்களும் ஓரணியில் கூட்டணியமைத்து நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த கூட்டணி பேராதரவுடன் ஏகமனதாக வெற்றியீட்டும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

0 Responses to நா.க.த.அரசுத் தேர்தலில் (நியூ சவுத் வேல்ஸ் மாநிலம்) கூட்டணியில் போட்டி வேட்பாளர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com