கிழக்கு மாகாணத்தில் ஏழுதமிழ் இளைஞர்கள் அவசரகால தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தொடரான சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
அண்மைய நாட்களில் உந்துருளியில் செல்லும் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் வீதிகளின் சந்திகள் மற்றும் முதன்மை இடங்களில் சுற்றிவளைப்பு தேடுதல்களை நடத்துகின்றார்கள்.
இவ்வாறு சுற்றிவளைப்புக்களில் இளைஞர்களின் கையடக்க தொலைபேசி பறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மட்டக்களப்பில் ஐவரும் அம்பாறையில் இருவருமாக ஏழு பேர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் மீது கையடக்க தொலைபேசியில் விடுதலைப்புலிகளின் பாடல்கள் வைத்திருந்தர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மூன்று நாட்களில் கிழக்கில் ஏழு தமிழ் இளைஞர்கள் அவசரகால தடுப்பு சட்டத்தின் கீழ் கைது