Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் தமிழ் மக்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவம் தற்போது அந்த பிரதேசங்களின் பாரப்பரிய தமிழ் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஈழத் தமிழ் மக்களை மட்டுமெல்லாது அவர்களின் பாரப்பரிய பிரதேசங்களையும் முற்றாக அழித்துவிடும் முழு முயற்சியில் சிறிலங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

வன்னியை முற்றுமுழுதாக தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு தற்போது அங்கு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு அனுகூலமாக வன்னியில் உள்ள சந்திகள் மற்றும் வீதிகளின் தமிழ் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய சிங்கள பெயர்களை சூட்டிவரும் சிறீலங்கா இராணுவம் அதனை முற்று முழுதாக சிங்கள மொழியிலேயே குறியீட்டு பலகைகளில் எழுதியும் வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதியை தனது உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம் சீனாவின் உதவியுடன் அங்கு பலமான தளங்களை அமைத்துள்ளதுடன், அதனை முற்று முழுதான ஒரு சிங்கள பிரதேசமாக மாற்றியும் வருகின்றது.

ஓட்டுசுட்டான் பகுதியில் உள்ள தான்தோன்றி ஈஸ்வரன் கோவிலுக்கு அண்மையில் உள்ள சந்திசிலை சந்தி” “பிலிமா ஹந்தியாஎன பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பௌத்த ஆலயம் ஒன்றையும் தாம் நிறுவ திட்டமிட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவுமாங்குளம் வீதி புதுக்குடியிருப்பு வீதியை சந்திக்கும் சந்தியின் பெயரும்கார் ஹந்தியா” (கார் சந்தி) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. போரின் போது இந்த பகுதியில் சிறிலங்கா இராணுவம் கார்களுக்கு தீ வைத்ததால் அதனை அவ்வாறு பெயரிட்டுள்ளனர்.

மேலும் நந்திக்கடல் பாலத்திற்கு அண்மையாக உள்ள வற்றாப்பளைகேப்பாப்புலவு சந்தியும்அலி ஹந்தியா” (யானை சந்தி) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த சந்தியில் யானை ஒன்று இறந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட அலுவலகத்தில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் உள்ள காரைச்சிகுடியிருப்பு பகுதியில் மிகப்பெரும் பௌத்த ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு சிறீலங்கா இராணுவம் திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்க மறுத்துவரும் சிறிலங்கா அரசு பல மில்லியன் ரூபாய்கள் செலவில் வடபகுதியில் பௌத்த ஆலயங்களையும், படையினருக்கான நினைவு மண்டபங்களையும் அமைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முல்லைத்தீவின் கரையோரப்பகுதியில் சிங்களவர்களை குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக முல்லைத்தீவு தகவல்கள் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to முல்லைத்தீவு மாவட்ட சந்திகளின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com