வன்னிப் போரில் குறைந்தது 30,000 ஈழத்தமிழர்கள் பலியாகியிருப்பதாக, திருமலை புல்மோட்டையில் செயலாற்றிய இந்தியப் படை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் பெயர்குறிப்பிடப்படாத இந்தியப் படை மருத்துவர், இறுதிப் போரின் பொழுது நாள்தோறும் நூற்றுக்கணக்கான காயக்காரர்களுக்கு தாங்கள் சிகிச்சையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்ட காயக்காரர்களில் 80 விழுக்காடானோர் தமது குடும்பத்தில் ஒருவரை அல்லது தமக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தவர்களாகவே காணப்பட்டதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்த பின்னர் 40,000 காயக்காரர்களுக்கு இந்திய மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும், இதனடிப்படையில் பார்க்கும் பொழுது குறைந்தது 30,000 பொதுமக்களாவது வன்னிப் போரில் மடிந்திருக்க வேண்டும் என்றும், ‘த ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளேடு குறிப்பிட்டுள்ளது.

0 Responses to வன்னிப் போரில் குறைந்தது 30,000 மக்கள் பலி!: இந்தியப் படை மருத்துவர்