இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற போரின் போது காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் நோக்கில் விசேட தற்காலிக சட்டம் ஒன்றை அமுல்படுத்த சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காணாமல் போனோரின் மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக ஏற்கனவே அமுலில் இருந்த சட்டத்தை மீளவும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சட்ட மூலம் தொடர்பான வரைபுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் காணாமல் போய் ஏழு வருடங்கள் கடந்த பின்னரே மரணச் சான்றிதழை வழங்க முடியும்.
எனினும் புதிய சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டால் ஒரு வருடத்திற்குள் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to அரசால் படுகொலை செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கத் திட்டம்