Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காய் உயிர் நீத்த முதற் தமிழ்மாணவரான தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் கனடா, ரொறொன்ரோ மாநகரில் தமிழ் மாணவர் சமூகத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம்: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 6ஆம் திகதி

நேரம்: மாலை 5.00மணி

இடம்: Everest Banquet Hall 1199 Kennedy Road Scarborough, ON

சிங்கள பேரினவாதத்தின் தமிழ் இன அழிப்பின் முதல் படியான தமிழரின் கல்விச்சிதைப்பை எதிர்த்து மாணவ தியாக சுடர் பொன் சிவகுமார் அண்ணா ஏந்திய வேள்வித் தீ எரிய தொடங்கி 36 வருடங்கள் ஆகிவிட்டது.

இன்று தாயகத்தை மீட்டெடுக்கின்ற இலக்கை நோக்கிவிருட்சமாய் வளர்ச்சியுற்று, விடியலின் வாசலை நெருங்கியிருக்கும் விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டவர்களும் அதனை வீறுகொண்டு எழுச்சிகொள்ளச் செய்தவர்களும் அன்றைய மாணவர்களே.

அந்த வகையில் தியாகி பொன்.சிவகுமாரனதுபங்கு மிக முதன்மையானது. பொன் சிவகுமாரன் அண்ணா அவர்களது உயரிய தியாகம், விடுதலை வேள்வியாகி, பல்வேறு பரிணாமங்கள் எடுத்து, இற்றைய காலகட்டத்தில் புலம் பெயர் தமிழ் இளையோரது பொறுப்பில் உள்ளது.

எம் இனிய தமிழ் மக்களின் வாழ்வுரிமை மற்றும் தமிழீழத் தாயின் சுதந்திரம் நோக்கிய போராட்டம் ஆகியவற்றை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இளையோராகிய நாம், மாணவர் எழுச்சி நாளாகிய ஜூன் 6ல் ஒன்று கூடி திடசங்கற்பம் பூணுவோமாக.

எமது மொழி செந்தமிழ், எமது நாடு தமிழீழம், எமதுகொடிபுலிக்கொடி, எமது தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற கொள்கைகளே எம்மைத் தமிழனாக உலக்குக்கு எடுத்துக்காட்டுவன, எனவே இவற்றை முன்னுதாரணப்படுத்தியே இனிவரும் இளையோரின் போராட்டம் தொடரும்.

எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து இன்றும் என்றும் தெளிவுடனும் உறுதியுடனும் எமது தமிழீழத்திற்காக தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் அரசியல் தீர்வு வரும் வரை போராட்டத்தை தொடருவோம்.

அனைத்து தமிழ்மக்களையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.

கனடியத்தமிழ்மாணவர்சமூகம்.

தமிழரின்தாகம்தமிழீழத்தாயகம்.

0 Responses to கனடியத் தமிழ் மாணவர் சமூகம் முன்னெடுக்கும் மாணவர் எழுச்சி நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com