கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய வேலணை மருத்துவ மாதுவின் உடல் உள்ளுறுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.இரண்டாம் முறை மருத்துவ பரிசோதனைக்காக தர்ஷிகாவின் சடலம் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி வரும் சட்ட வைத்திய அதிகாரி சடலத்தின் உள்ளுறுப்புக்களை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார்.
இதனையடுத்து தர்ஷிகாவின் குடும்ப சட்டத்தரணி சடலத்தின் உள்ளுறுப்புக்களைத் தோண்ட அனுமதிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் உடல் உள்ளுறுப்புக்களை தோண்டி எடுக்க உத்தரவிட்டது.
இதற்கமைய கொட்டடி மெதடிஸ்த சேமக்காலையிலிருந்து மேற்படி உறுப்புக்கள் தோண்டி எடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை குளிருட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. இவை நாளை சனிக்கிழமை கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இதேவேளை நீதிமன்றிற்கு மதுபோதையில் வந்தமை மற்றும் சடலம் தோண்டப்படும் போது மயானத்திற்கு வராமை போன்றன நீதிமன்றை அவமதிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டின் பெயரில் பிணப்பதப்படுத்தல் ஊழியர்கள் இருவரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆர்.வசந்தசேனன் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வேலணை மருத்துவ மாதுவின் உடல் உள்ளுறுப்புகள் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)