இலங்கையில் போர் முடிந்து 16 மாதங்கள் முடிவடைந்தும் தமிழர்கள் மேம்பாட்டுக்காக எந்த ஒரு வழியையும் இலங்கை அரசு செய்து தராமல் இருக்கிறது. தமிழர்களின் உண்மை நிலையை யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் ரகசியம் காக்கிறது. உலகக் பார்வையாளர்களும் தமிழர் பகுதியைப் பார்வையிட தடுக்கப் படுகின்றன. என்று தமிழீழ அகதிகள் நல்வாழ்வுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரலிங்கம் கூறினார்.அனைத்துலக நாடுகள் இதுவரை தமிழர்கள் முன்னேற்றத்திற்க்காக அனுப்பிய பல கோடி டாலர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது அத்தனை பணத்தையும் தவறாக பயன்படுத்திய இலங்கையரசு தமிழர்களுக்குக்கென சிறு தொகையைக் கூட செலவு செய்யவில்லை பல கோடி டாலர் நிதியை இலங்கை ராஜபக்ஷே அரசு. போரில் தமிழர்களைக் கொன்டு குவித்த ராணுவ வீரர்களுக்கென 5000 புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற நிதி திரட்டும் விருந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், கோடிஸ்வரர்கள் வழங்கிய பல லட்சம் வெள்ளி, நிதியாக திரட்டப்பட்டு அதுவும் இலங்கை அரசுக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழர்களின் உண்மையான நிலை தெரியாமல் இன்னும் வீடுகளின்றி, குடிசையில், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழும் அவர்களுக்கு உதவும் எண்ணத்தில் நாம் இங்கிருந்து அனுப்பும் நிதி தமிழர்களுக்கு எதிராகவே செலவு செய்யப்படுவது தமிழர்களுக்கு நாம் இழைக்கும் அநீதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட அமைப்புகளிடமோ, தனிப்பட்ட நபர்களிடமோ கொடுக்கப்படும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதும் வேதனைக்குரியது. இவர்களிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் புலம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாக வந்து வாழவழியின்றி தவிக்கும் மக்கள் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். பலர் இறந்தும் விட்டனர். பிரசவத்திற்கு காத்திருக்கும் தாய்மார்களும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் பெற்றோர்களுக்கும் இயன்ற உதவிகளை நாம் செய்ய வேண்டும்.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வருபவர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தமிழீழ அகதிகள் நல்வாழ்வுத் திட்டத்தின் ஒருகிணைப்பாளர் ஈஸ்வரலிங்கம் தெரிவித்தார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to இலங்கைக்கு நிதி அனுப்புவதை நிறுத்த வேண்டும்: ஈஸ்வரலிங்கம்