Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை உயர்மட்டக்குழுவினரின் சந்திப்புகள் திட்டமிட்டபடி இடம்பெறவில்லை. இந்தநிலையில் அந்தக் குழுவினர் நேற்று நாடு திரும்பினர்.

அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையிலான இந்தக்குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் நோக்குடனேயே இந்தியாவுக்கு சென்றது. எனினும் அது சாத்தியமாகவில்லை.

இந்தநிலையில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மாத்திரமே இந்தக்குழு சந்தித்தது.

இதனைத் தவிர, தமது விஜயத்தின் போது இந்திய சிறப்பு பிரதிநிதி ஒருவரின் இலங்கை விஜயத்தை தடுக்கலாம் என்ற நோக்கமும் இலங்கை குழுவிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

எனினும் இந்த விசேட பிரதிநிதி என்ற அடிப்படையில் வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவை இலங்கைக்கு அனுப்புவது, இலங்கைக்குழுவின் விஜயம் தோல்வியடைந்துள்ளமையே காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது

நிரூபமா ராவ் ஏற்கனவே இலங்கையின் பணியாற்றியவர் என்ற காரணத்தினாலேயே அவரை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு நாளை விஜயம் செய்யவுள்ள இந்திய வெளி விவகார செயலாளர் நிருபமா ராவ், நாளை மறுநாள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளக இடம்பெயர்வு முகாம்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரக தரப்ப்புகள் தெரிவித்துள்ளன.

இதன்போது அவர் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் இந்திய உதவிகள் வன்னியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆராய்வார் என உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து புதன்கிழமையன்று நிருபமா ராவ் திருகோணமலைக்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திக்கும் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார்.

இதற்கிடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட்ட கட்சியினரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தோல்வியில் முடிந்த இலங்கை உயர்மட்டக் குழுவினரின் இந்திய விஜயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com