Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரைக் கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கனடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான அணுகுமுறை மீது ஆத்திரம் கொண்டே இவர்கள் வன்கூவர் கலா பவனத்தில் ஒன்று கூடி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைந்த தமிழ்க் குடியேற்றவாசிகள் 492 பேரும் குடிவரவு குறித்த நடைமுறைகளின் பேரில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் திசுக் கடதாசிகளில் செய்யப்பட்ட பூக்களை விநியோகித்ததுடன் கனடிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் ஜேசன் கென்னியையும் கொடுமையான வார்த்தைகளால் கடிந்து கொண்டனர்.

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருடைய அமைச்சு இருவகை வழிமுறைகளைக் கொண்டதென்றும், வறிய நாடுகளில் இருந்து வரும் வெள்ளையரல்லாத குடியேற்றவாசிகளை தண்டிக்கிறதென்றும் கோஷமிட்டனர்.

அகதிகள் தொடர்பில் விரோத எண்ணமும் அச்சமும் தெரிவிக்கப்பட்டு வருவதைக் கண்டு நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்' என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவரான ஹர் ஷா வாலியா தெரிவித்தார்.

அகதிகள் குறித்து வசையாக வந்து குதிப்பவர்கள், பயங்கரவாதிகள், குற்றச்செயலில் ஈடுபட்டோர் போன்ற வார்த்தைகளை மறவாதிருக்கும் வகையில் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது.

ஆனால் சட்டத்தில் இவைகளில் ஏதேனும் ஒன்று இடம்பெறவில்லை. அப்படியிருந்தும் அரச அதிகாரிகள் அலுப்புத் தட்டும் அந்த வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்'' என்றார் அவர்.

வாலியாவும் ஏனையோரும் ““ஒருவரும் சட்டவிரோதமானவர் அல்லர்'' என்ற சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தனர்.

அத்துடன் 492 பேர்களின் இதயங்களை வண்ணத்தால் தீட்டிய பதாகையொன்றையும் அவர்கள் கொண்டிருந்தனர்.

இந்த 492 இதயங்களும் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வந்த 492 பேர்களையும் குறிப்பதாகும்.

இதேபோன்று அகதிகள் ஆதரவு கூட்டங்கள் விக்டோரியா, டொரன்டோ ஒட்டாவா, மொன்ட்றியல் மற்றும் கிச்சனர் வாட்டர்லூவிலும் நடத்தப்பட்டதாகத் தெகிறது.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழ் அகதிகளை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக கனடிய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com