Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதிக்காய்...
முகம் கொடுத்தோம்.
முள்வேலிக் கம்பிக்குள்...
முடக்கப்பட்டோம்.

தாய் மண்ணிற்காய்....
தோள் கொடுத்தோம்.
தடுப்பு வதைமுகாமுக்குள்....
தள்ளப்பட்டோம்.

வேதனை என்ற...
போர்வையில்.
வெந்து போனது...
எம் உள்ளங்கள்.

சாதனை என்ற...
பார்வையில்.
புதைந்து போனது...
அரசின் உண்மைகள்.

தாயக விடுதலைக்காய்
தமிழ் மானம் காக்க...
கால் நடையாய்ப்...
புறப்பட்ட வீரன் சிவந்தா....!

பார் எங்கும் - உன்
வீரம் பேசட்டும்.
தமிழர் நாம் - யார் என்று
இந்த உலகம் அறியட்டும்...!

***********************************************

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

2 Responses to சிவந்தனின் வெற்றிநடை...!: கவிதை வடிவம் அபிசேகா

  1. சிவந்தனின் சிந்தனையை
    சிறப்பாகக் கவியாக்கி
    கரம் சேர்க்க உதவும்
    கவிஞருக்கு வாழ்த்து!

    உரமாக உணவிட்டு
    உயிர்களை எழுப்பிவிடும்
    உற்சாக வார்த்தைகளுக்கு
    உளமார்ந்த பாராட்டு!

    உலகத் தலைமைகளுக்குள்
    இதயங்கள் இல்லையா ?
    இரும்புகள்தானா இருக்கின்றன?
    இன்னும் இங்கே மனிதம் கேட்கிறது?
    மீரா

     
  2. உங்கள் வாழ்த்துக்களும்....
    மனித நேயத் தேடல்களும்....
    நிச்சயம் பூக்காளாய் மலர்ந்து
    நம் நாட்டில்...
    சுகந்தமாய் வீசப்போகின்றது.
    நன்றி மீரா அக்கா.....!

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com