ஐ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு ஆயுத மோதல்களின் போதான பாலியல் வன்செயல்கள் குறித்து ஆராய்ந்து வரும் சர்வதேச நிபுணரான மார்கொட் வோல்ஸ்ரொம் தலைமையிலான அணியினரால் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை,மியன்மார், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து அவருடைய அணியினரால் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
இவரது அணியால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும், பாதுகாப்புச் சபைக்கும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. பாலியல் வன்முறை என்பது கலாசாரத்தின் ஒரு அம்சம் அல்ல, ஒரு குற்றச் செயலாகும்.
இக்குற்றச்செயலை தடுத்து நிறுத்துவதற்கு குற்றவாளிகளுக்கு தவறாமல் தண்டனை வழங்க வேண்டும், அவர்கள் தப்பி விடவோ, மன்னிப்புப் பெறவோ அனுமதிக்கக் கூடாது என்று மார்கொட் வோல்ஸ்ரொம் இன்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சிறிலங்காவில் ஆயுத மோதலின்போது இடம்பெற்ற கற்பழிப்புகள் குறித்து தகவல்கள் சேகரிக்கிறது ஐ.நா