Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

அவர் உடனடியாக தமது பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ள நிலையிலேயே சவேந்திர சில்வாவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் பிரதி வதிவிடப்பிரதிநிதி பந்துல ஜயசேகரவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் குறித்து உரிய விளக்கங்களை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்திவந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு 58 வது பிரிவு தளபதியான சவேந்திர சில்வாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தமையும் இதற்காக சரத் பொன்சேகா பின்னர் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா ஐ.நா. உதவி நிரந்தர பிரதிநிதியாக நியமனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com