இலங்கையில் யுத்தம் நடைபெறவில்லை. மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய இவ்வாறு தெரிருக்கிறார். சன் சீ கப்பலில் சென்ற அகதிகளுக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கவேண்டும். அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் அவர்கள் இலங்கையில் இன்னல்களை எதிர்நோக்குவார்கள் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜாலிய விக்கிரமசூரிய கடிதம் ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபைக்கு அனுப்பிவைத்தார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
இலங்கையில் நடைபெற்ற யுத்தமானது ஒரு சிவில் யுத்தமாக வர்ணிக்கப்படுவதை அரசு நிராகரித்துள்ளது. மேற்கத்தேய நாடுகள் தங்களது வசதிக்காக இதனை ஒரு சிவில் யுத்தமாக வர்ணித்து வருகின்றன.
இதேவேளை, புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை அரசு பல்வேறு மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் புரிந்துள்ளது எனக் கூறப்படுவதானது வன்மப்போக்காகும். விடுதலைப் புலிகள் என்னும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவே இலங்கை இராணுவத்தினர் நீண்டகால யுத்தம் ஒன்றை நடத்தினர். இது முற்றிலும் பயங்கரவாதத்துக்கு எதிரானதாகும். இதனை சிவில் யுத்தம் என்று வர்ணிப்பது தவறாகும்.
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்தப் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுட்டனர். இதன்போது புலிகளால் தமிழர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்படுமேயானால் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து எவ்வாறு 3 லட்சம் பொதுமக்கள் காப்பாற்றப்பட்டனர் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகளையும் பெற்றவர்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களையும் பாதுகாத்து அவர்களுக்கான சிறந்த வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தற்போது முழுமையான கவனம் செலுத்தி வருகின்றது - இவ்வாறு விக்கிரமசூரிய தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இலங்கையில் யுத்தமே இல்லையாம்: மனிதாபிமான நடவடிக்கையாம்