எனினும் என் நினைப்புக்கு இராணுவ நீதி மன்றத்தின் தீர்ப்பு அவகாசம் தர மறுத்துவிட்டது. ஆம், தங்களின் ‘ஜெனரல்’ பதவியை ரத்துச் செய்யுமாறு அத் தீர்ப்பு அமைந்துள்ளதால், இக் கடிதத்தை உடனடியாக எழுத முற்பட்டேன் ஜெனரல் சரத்பொன்சேகா என்று இறுதியாகவேனும் அழைத்துவிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர, வேறு எதுவும் கடிதம் எழுதும் அவசரத்திற்குக் காரணமல்ல. ஜெனரல் என்று அழைப்பதில் உங்களுக்கு உண்டாகும் விருப்பத்தின் காரணம் யாதோ என்றால்,
உங்கள் ஜெனரல் பட்டத்தில் பளிச்சிடும் ஒவ் வொரு பதக்கங்களின் வரிசையிலும் தமிழர்கள் மீது நீங்கள் நடத்திய தாக்குதலின் தழும்புகள் இருப்பதை தாங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் நினைத்திருந்தால்-வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறியிருந்தால், எத்தனையோ தமிழ் இளைஞர்கள் இன்றும் உயிரோடு இருந்திருப்பர்.
சிலவேளை அவர்கள் உங்களுக்காக இறைவனைப் பிரார்த்தித்திருப்பார்கள்.என்ன செய்வது அந்த ஆத்மாக்களின் அவலத்தின் ஒலிதான் உங்களை இருட்டறையில் வைத்து சித்திரவதையின் சிறப்பை உணர்த்தி நிற்கின்றது. உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்ற தத்துவம் தமிழில் உண்டு. அதுபோல தாமே தமக்கு பகை என்ற தத்துவமும் தங்கள் வாழ்வில் அமு லுக்கு வந்துவிட்டது.
இனி, நடப்பதைக் கண்டுகொள்ள வேண்டியதுதான். இருப்பினும் எங்கு போய் முறையிட்டாலும் நீதி கிடைக்காது என்று நீங்கள் கூறினீர்களே அந்த வார்த்தை உண்மையில் என் நெஞ்சைத் தைத்துக் கொண்டது.உங்களிடம் முறையிட்டவர்களின் மனுக்களை -உங்கள் முன் கண்ணீர்விட்டு அழுத தமிழ் அன்னையர்களின் அவலத்தை-காணாமல் போன உறவுகளை தேடி அலையும் பரிதாபத்தை நீங்கள் கண்டு கொண்டிருந்திருப்பீர்களாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டி இருந்திருப்பீர்களாயின், நிச்சயம் உங்களுக்கு இறைவன் உதவுவான்.
அதேநேரம் உங்களால் நீதி வழங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக இருந்தும் அதனை நீங்கள் புறந்தள்ளி இருந்ததால் அதன் இரட்டிப்பை அறுவடை செய் வதிலிருந்து தாங்கள் தப்ப முடியாது. எதுவாயினும் பட்டினத்தார் கூறிய ‘தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்’ என்ற தத்துவத்தை இக்கடித மூலமாக உங்களுக்கு தரு வதோடு, இந்த தத்துவம் அவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நன்றி.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



thevidyaa makanukku kaditham ennaatthukku... engal maaveerarkalin thiyaakankal vithaiyaaka irukkirathu..