Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது பராமரிக்கப்பட்டு வரும் செஞ்சோலை மாணவர்கள் உளநல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வதைமுகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள செஞ்சோலை மாணவர்கள் தற்போது வவுனியா றம்பைக்குளத்தில் உள்ள தனியார் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இதில் 115 பெண் பிள்ளைகள் பராமரிக்கப்பட்டுவருகின்ற நிலையிலும் அவர்களுக்கான உளவியல் ரீதியிலான ஆற்றுப்படுத்துகை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இம் மாணவர்களின் மனங்களில் செஞ்சோலையில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய வான்தாக்கதல் நீங்காத வடுவாக இன்னமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to செஞ்சோலை மாணவர்கள் உளநல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com