Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிரந்தர பிரதிநிதியாக இலங்கையின் யுத்தக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பின்போது, கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி, அது தொடர்பில் தாம் அறிவிப்பதாக குறிப்பிட்டார்.

வன்னி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்திவந்த புலிகளை 58 வது படையணியின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவுக்கே உத்தரவிடப்பட்டது என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த நிலையில் எவ்வாறு இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்வது என இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது.

அனுமானங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் என மார்டின் நெசர்கி இதற்கு பதிலளித்தார்

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கு பதிலாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

எனினும் அந்த விடயம் குறித்து தனக்கு தெரியாது என மார்டின் நெசர்கி பதிலளித்தார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இலங்கையின் இராஜதந்திரி ஒருவரை கோடிட்டு இன்னர் சிற்றி பிரஸ், வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் இடமாற்றப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சவேந்திர சில்வா பிரதி வதிவிடப் பிரதிநிதி, வசந்த கரன்னகொட வதிவிட பிரதிநிதியா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com