Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க இன்று ஒரு மணியளவில் காவல் துறையினர் செந்தமிழன் சீமான் அவர்களை சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள்ள தேசியப் பாதுகாப்பு சட்ட அறிவுரைத் தீர்ப்பாயதிற்கு அழைத்து வருதவதாக செய்தி அறிந்து ஏராளமான பொது மக்களுடன் நூற்றுகணக்கான நாம் தமிழர் கட்சியினர் காலையிலிருந்தே திரண்டு இருந்தனர். மதியம் ஒரு மணியளவில் அண்ணன் சீமானை காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

அறிவுரை கழகத்திற்கு மதிப்புக்குரிய தமிழ் தேசிய முன்னணி தோழர் தியாகு அவர்கள் தனது வாதங்களை முன் வைத்தார், அதை கேட்டு கொண்ட நீதி அரசர்கள், அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்கள், அதன் பின் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வேலூர் சிறைக்கு திருப்பி அழைத்து செல்லப்பட்டார்.

அதன் பிறகு தோழர் தியாகு அவர்கள் நமது நாம் தமிழர் இயக்க தமிழ் தேவனுக்கு பேட்டியில் கூறியதாவது:

சீமானை தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி நமது தரப்பு நியாயங்களை இந்த அறிவுரை கழகத்திற்கு எடுத்து வைத்திருக்கிறோம். அறிவுரை கழகம் என்பது நீதி மன்றம் அல்ல. நமது தரப்பு நியாயங்களை விசாரித்து அரசுக்கு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா இல்லையா என்று பரிந்துரை செய்வார்கள். தவறு என்று கூறி விடுதலை செய்ய சொல்லலாம், அல்லது உத்திரவை செயல் படுத்த சொல்லியும் சொல்லலாம். இதுவே இந்த அறிவுரை கழகத்தின் பொறுப்பு.


2009 ல் சீமானை கைது செய்யும் பொழுதும் இப்பொழுது இருக்கும் இதே மூன்று நீதியரசர்கள் தான் அன்றும் இருந்தார்கள். கடந்த ஆண்டும் இதே போல் தான் நாங்கள் அவர்களிடம் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறினோம் அதற்கு பிறகு உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது. அன்று உயர் நீதி மன்றம் என்ன காரணத்திற்காக விடுதலை செய்ததோ அந்த காரணத்தை சரியாக ஆராயாமல் அரசாங்கம் அதே காரணத்தின் அடிப்படையில் இந்த உத்திரவை பிறபித்து கைது செய்திருக்கிறது.

அன்று என்னென்ன குறைகளுக்காக விடுதலை செய்யப்பட்டாரோ, அதே காரணங்கள் இந்த வழக்கிலும் அப்படியே உள்ளன. மேலும் கூடுதல் மாநகர காவல் ஆய்வாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய சொல்லி உத்திரவு பிறபித்திருக்கிறார். அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய சொல்லும் அதிகாரம் இல்லை. மாநகர காவல் ஆய்வாளர் அல்லது மாவட்ட நீதியரசர் மட்டுமே இந்த உத்திரவை பிறப்பிக்க முடியும். அதற்க்கு ஆதரவாக 1965 ல் பிறபிக்கப்பட்ட உச்ச நீதி மன்ற உத்திரவின் படிவத்தை கொடுத்துள்ளோம்.

தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது. ஒருவேளை அவ்வாறு பேசுவதால் ஏதாவது வன்முறை நிகழ்திருந்தால் வேண்டுமானால் பாதுகாப்பு தடை சட்டம் போடலாம். ஆனால் சீமான் பேசியதால் இதுவரை எந்த வன்முறையும் நிகழவில்லை என்ற அடிப்படையிலேயே கடந்த முறையும் விடுதலை செய்தார்கள் அதன் அடிபடையிலேயே இந்த முறையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டோம் அதற்கு நீதியரசர்கள் சீமான் பேசியதால் கடையை மூடிவிட்டு மக்கள் அச்சமடைந்து ஓடிவிட்டார்கள் என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்களே என்று கேட்டனர்.

அதற்கு நாங்கள் சீமான் சிங்களவனை பற்றி மட்டும் தானே பேசினார். இதுவரை எந்த சிங்களவனும் பயந்து கடையை மூடிவிட்டு ஓடவில்லையே. எந்த சிங்கள மாணவனும் இதுவரை தாக்கப்படவில்லையே. அருகில் இருந்த நகலகம் கடை வைத்திருப்பவர் கடையை மூடி விட்டு சென்றதை ஒரு காரணமாக சொல்லமுடியாது என்ற வாதத்தை அவர்களும் ஏற்று கொண்டனர். பிறகு இந்திய அமைதி படையை பற்றி பேசியதை பற்றி கேட்டனர்.

அதற்க்கு சீமான் நாம் பேசியது உண்மைதானே இந்திய அமைதிப்படை ஈழ தமிழர்களை கொன்று குவித்தது உண்மை என்று முதல்வர் கருணாநிதி அவர்களே பேசியிருக்கிறார்களே என்று கூறினார். நானும் ராசீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் இந்திய அமைதி படை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்க்காகதான் அந்த பழி வாங்கும் நடவடிக்கை அமைந்தது என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பிலேயே கூறியிருக்கிறார்கள் .

இதற்காக தேசிய பாதுகாப்பு தடை சட்டம் போட முடியாது என்று வாதிட்டோம். இதை உயர் வழக்காடு மன்றத்தில் தெரிவித்தீர்களா என்று கேட்டனர் தெரிவித்து இருக்கிறோம் என்று சொன்னோம். பிறகு அவர்களிடம் உயர் நீதி மன்ற விசாரணை வரை நீங்கள் தாமதிக்க வேண்டாம் உங்கள் விசாரணையிலேயே நீங்கள் இவரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைக்கலாமே என்று கூறினோம்.


அதற்க்கு அவர்களாலும் ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள் என்றார் மதிப்புக்குரிய தமிழ் தேசிய முன்னணி தோழர் தியாகு அவர்கள்.

சென்னையிலிருந்து 495 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தொண்டியை சேர்ந்த 65 வயதாகும் முத்து என்ற முதியவர் அண்ணன் சீமான் வருவதை அறிந்து வந்திருந்தார். தொண்டியில் உள்ள சரவணா என்ற உணவு விடுதியில் சமையல் செய்யும் வேலையை செய்யும் இவர் ஒரு நாளைக்கு 150 ரூபாய் ஈட்டுகிறார் இந்த நிலையிலும் இந்திய் நாட்டு இறையாண்மை என்ற தலைப்பில் ஈழ மக்கள் படும் அவலங்களை இந்திய அரசு செய்யும் துரோகத்தை ஆறு பக்கங்கள் அடங்கிய அறிக்கையை அங்கிருந்த எல்லோருக்கும் இலசவமாக அளித்து கொண்டிருந்தது.

எல்லோரையும் நெகிழ வைப்பதாக இருந்தது .இந்த வயதில்அவருக்கு இருக்கும் கடமை உணர்ச்சி இங்குள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால் நாம் இனத்தை காப்பாற்றி இருக்கலாம்.அவரதது வருகை நாம் தமிழர் தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது .அவருக்கு சிறிய அளவிலான நிதி உதவியும் செந்தமிழன் சீமானின் அணிந்த்துரையில் இலங்கையின் பூர்வீக தமிழர்கள் மற்றும் மே நாள் வீர வணக்கம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .


அவர் பேசும் பொழுது கூறிய வார்த்தை சிங்கள ராணுவம் பிறந்த மேனியாக்கி சித்திரவதை செய்து சுட்டு கொல்வது தமிழக மீனவர்களை அல்ல இந்த இந்திய இறையாண்மையை,மன்மோகன் சிங்கை, சோனியாவை, இந்த நாட்டிலுள்ள 110 கோடி இந்திய குடிமக்களை இதை இங்குள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். உணர்ந்து கொள்வார்களா?

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to செந்தமிழன் சீமான் அவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com