இந்த நிலையில், கனடா சென்றுள்ள இலங்கை அகதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் என குற்றம் சுமத்தப்படுகின்றமைக்கு, எந்த ஆதாரமும் இல்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து இலங்கையர்களை ஏற்றிய அகதிகள் கப்பல் கனடா நோக்கி பயணிக்கின்றமை தொடர்பிலான தகவல் வெளியானதில் இருந்து, இதுவரையில் பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே அகதிகள் என்ற போர்வையில் கனடா வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கு முன்னர் ஓசியானிக் லேடி கப்பல் மூலம் கனடா வந்தவர்களும், தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பினும், அதில் விடுதலைப்புலிகள் ஒருவரேனும் இருந்தமை நிரூபிக்கப்படவில்லை.
அதுபோன்றே தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அகதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக இருக்க முடியாது என, அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்ட சிறுபான்மை மக்களுக்க எதிரான பல்வேறு கொடுமைகளின் விளைவாகவே, அங்கிருந்து பாரிய அளவிலான தமிழ் மக்கள் கனடாவுக்கு தப்பி வருவருதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கை அகதிப்படகு கனடாவை அண்மித்த பின்னர் அதனை திருப்பி அனுப்ப இருக்க வேண்டும் என கனடாவின் 63 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
1000 கனேடியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பலரும் இந்த கப்பலை கனடாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எவ்வாறாயினும் 35 சதவீதமானவர்கள் அகதிகளுக்கு அரசியல் அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும், 48 சதவீதமானவர்கள், நாடுகடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கனேடிய அகதிகளில் விடுதலைப்புலிகள் இல்லை: கனேடிய ஊடகம்