அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கையில்:
இரத்தத்தால் சிவந்துபோன தமிழீழத்தில் எஞ்சியிருக்கும் மக்களை எந்த வகையிலாவது காப்பாற்ற முன்வரும்படி உலகநாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் முகமாகவும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இளைஞரான சிவந்தன் பிரிட்டனில் இருந்து தொடங்கி பல்வேறு நாடுகள் வழியாக நடந்து சென்று இறுதியாக சுவிஸ்சர்லாந் நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மனுவை கையளிப்பதற்காக அவர் நடந்து செல்லுகிறார்.
தமிழீழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ இவ்வாறான நடைப்பயணம் என்பது வேறு, ஆனால் கொட்டும் பனியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இளைஞரான சிவந்தன் நடந்து தன்னுடைய இலட்சியத்தை நிறைவேற்ற அவர் கொண்டுள்ள அந்த உறுதியை உலகத்தமிழினம் சார்பில் மனமார பாராட்டுகின்றேன்.
அவருடைய நடைப்பயணம் உலக ஆன்மாவை தட்டி எழுப்பட்டும். அவரது நடைப்பயணம் ஐ.நா பேரவையை செயல்பட வைக்கட்டும். ஈழத்தில் சொல்லொனா துயரத்திற்கு நடுவே இன்னமும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிற தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு உலகநாடுகள் உதவிக்கரங்களை நீட்டவேண்டும்.
எஞ்சியிருக்கின்ற மக்களை காப்பாற்றும் கடமையும், பொறுப்பும், உலகநாடுகளுக்கும், அதனை தலைமை தாங்குகின்ற ஐக்கிய நாடுகள் சபைக்கும் உண்டு. ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தது. ஆனால் அந்தக் குழுவை உள்ளே நுளைய விடமாட்டோம் என்று ராஜபக்க்ஷ அங்கே கொக்கரிக்கிறார்.
ஆனால் ஐ.நா இதில் உறுதியாக நின்று தான் அமைத்த குழு விசாரிக்கவேண்டும், அதை அனுமதிக்க மறுத்தால் இலங்கை மீது ஐ.நா மன்றம் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை எடுக்கவேண்டும் என்ற உறுதிப்பாடு ஐ.நா மன்றத்திற்கு இருக்கவேண்டும். சிவந்தன் தன்னுடைய குறிக்கோளில் வெற்றிபெறவேண்டும் என்று உலகத்தமிழர் பேரவைத் தலைவர் என்ற முறையில் அவருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தன்னந் தனியாக் அநடக்கவில்லை உலகத் தமிழர் அத்தனைபேரின் ஆதரவோடும் உலகத்தமிழர்களின் பிரதிநிதியாக அவர் நடந்து செல்கிறார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலக கதவை அவர் தட்டுகிற செயலானது ஒருமனிதன் தட்டுகிற செயல் அல்ல.
உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தட்டுகிறார்கள் என்பதுதான் அதற்கு பொருள்.
அதை ஐ.நா உணர்ந்து செயற்படவேண்டும் என்று வற்புறுத்தி சிவந்தன் அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன் என்றார்.
***********************************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஐ.நா நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளும் சிவந்தனுக்கு எனது வாழ்த்துக்கள்: பழ.நெடுமாறன் (ஒலி வடிவம் இணைப்பு)