2012 ஜனவரி 1 இல் அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதவிக்காலம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே பான் கீ மூனுக்கு மாற்றீடான வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் மேலெழுந்திருக்கிறது. பான் கீ மூனினால் ஐ.நா.வில் உயர் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டோரின் பெயர்களும் தெரிவிக்கப்படும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலில் காணப்படுவதாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.ஆப்கானிஸ்தானில் தனது பிரதிநிதியாக ஸ்டாபன் டி மிஸ்தூராவை பான் கீ மூன் நியமித்திருந்தார். ஈராக்கில் ஐ.நா. குழுவின் தலைமையதிகாரியாக பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர் ஜி நியமிக்கப்பட்ட பின்னர் டி மிஸ்தூரா ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டிருந்தார். (அதுவரை காலமும் கோபனேஹனில் ஐ.நா. செயல் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தில் உயர் அதிகாரியாக ஜாங் மட்சனால் பான் கீ மூனின் மருமகன் நியமிக்கப்பட்டிருந்தார்.)
ஆனால், 2011 இன் பிற்பகுதியில் பான் கீ மூனுக்கப் பதிலான வேட்பாளராகும் கனவை டி மிஸ்தூரா கொண்டிருப்பதாக ஆப்கானிஸ்தானில் ஐ.நா.வுக்காக பணிபுரிவதற்காகச் சேர்க்கப்பட்டவர்கள் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறுகின்றனர்.
நீருக்குள் இரத்தம் இருப்பதாக இந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரிட் அக்லேனியஸின் மதிப்பீட்டு அறிக்கையைத் தொடர்ந்து இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது செயலாளர் நாயகம் பதவி பிராந்திய மட்டத்திலான குழுவைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமென கூறப்படுவதால் டி மிஸ்தூரா மற்றும் ஆசியாவைச் சாராத ஏனைய போட்டியாளர்களுக்கு பிரச்சினை உள்ளது. 2005 இல் எகிப்தின் பூட்ரோஸ் பூட்ரோஸ் காலியை அமெரிக்கா வீட்டோ செய்த போது அந்தப் பதவி மற்றொரு ஆபிரிக்கரைச் சென்றடைந்தது. ஆதலால், இப்போது இந்தப் பதவி பான் கீ மூனுக்கே தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்ற ஊகங்கள் காணப்படுகின்றன. ஆசியாவையும் சமமான முறையில் நடத்தப்படவேண்டுமென சீனா வலியுறுத்தி வருகிறது.
ஆனால், உலக வங்கியின் உயர் பதவியை சீனாவிற்கு வழங்குவதற்கு பதிலாக ஐ.நா. செயலாளர் நாயகம் பதவி தொடர்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் உரிமையைக் கொண்டிருப்பதற்கான பேரப்பேச்சை அமெரிக்கா மேற்கொள்ளும் என சில காலத்திற்கு முன்னர் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது. அதாவது தனது சொந்த தேர்வின் பிரகாரம் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பான் கீ மூனை அகற்றுவதற்கான உரிமைக்கு பதிலாக உலக வங்கியின் உயர் பதவி நியமனத்திற்கான உரிமையை சீனாவிற்கு அமெரிக்கா விட்டுக்கொடுக்கக் கூடுமென இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.
ஈராக்கில் அமெரிக்காவுக்காக டி மிஸ்தூரா பணியாற்றியிருந்தார். அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் பணியாற்றினார். அவருக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்குமெனக் கருதப்படுகிறது. அடுத்ததாக நீண்டகாலமாகக் குறிப்பிடப்படும் வேட்பாளராக பில்கிளின்டன் காணப்படுகிறார். ஏனையோர் கிழக்குத் திமோரின் ஜோஸ் ராமோஸ் கோட்டாவைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை மற்றொரு வேட்பாளரான ஜோர்தானின் செய்ட் பின் ராட்டை ஆசியக் குழு விரும்பக்கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. பிரேஸிலின் லூலா அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லையெனத் தோன்றுகின்றது. ஏனெனில், அண்மையில் ஈரானுக்கு எதிரான விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக பிரேஸில் வாக்களித்திருந்தது. மேலும் இந்தியாவின் சசிதரூன், "கிரிக்கெட்கேட்%27 விவகாரத்தில் தனது காலையே சுட்டுக்கொண்டதாகத் தோன்றுகிறது.
சிலர் மிச்சேல் பஜ்லெட்டின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். ஐ.நா. பெண்கள் அமைப்பின் உயர் பதவிக்கப்பால் அவருக்கு பதவி வழங்கப்படமாட்டாது என்பதை அவர் விளங்கிக்கொண்டுள்ளார். வேறு பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. திருமதி அக்ஜீனியஸுக்கும் அலிஸியா பார்சேனாவுக்கும் இடையிலான நேச அணி குறித்து சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். அலிஸியா ஐ.நா.வின் உயர் முகாமைத்துவ பதவியை விட்டு வெளியேறியிருந்தார். பான் கீ மூன் பதவிக்கு வந்தபோது அவர் சந்தியாகோவுக்குச் சென்றுவிட்டார். அவர் நியூயோர்க்கில் அக்ஜீனியஸுடன் ஒன்றாக உணவருந்தியதாகவும் அல்ஜீனியஸ் அறிக்கையைக் கசியவிடுவதற்கு முன்னதாக அவர் ஒன்றாக உணவருந்தியதாகவும் கூறப்படுகிறது.
பெருமளவு வேட்பாளர்கள் உள்ளனர். அத்துடன், தண்ணீருக்குள் இரத்தமும் உள்ளது என்று ஒரு வட்டாரம் சுட்டிக்காட்டியதாக இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது. செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிப்பதற்கு முன்பாக உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது நடைமுறையாகும்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் யார்? பந்தயத் திடலில் பல பிரபலங்கள்