சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு விடயத்தில் போதிய அழுத்தங்களை மேற்கொண்டு அதனை இடைநிறுத்த தவறினார் என்ற காரணத்தினால் ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித்த கோகன்னவுக்கு பதவிநீடிப்பு வழங்காமல் அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாத்துடன் ஓய்வுபெற அனுமதிக்க சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.சிறிலங்காவின் போர்க்குற்ற விவகார நிபுணர்குழு நியமனத்தை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதமை மட்டுமல்லாமல் அந்த நிபுணர்குழுவுக்கு தகவல்களை வழங்குவதற்கு மேலும் ஒரு குழுவினை ஐ.நா. நியமித்தபோது, இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. அமைத்த குழுவுக்கு தலைமை தாங்கி விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாலித்த கோகன்ன சிரியாவுக்கு சென்றிருந்தார்.
ஐ.நாவின் ஊடாக சிறிலங்காவுக்கு பாரிய அழுத்தம் நிலவிய காலப்பகுதியில் கோகன்ன பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டார் என்ற கடும் சீற்றமே அவரை பதவிநீடிப்பு செய்யாமல் நாட்டுக்கு அழைப்பதற்கான காரணம் என்று சிறிலங்கா அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நாடு திரும்பவுள்ள கோகன்னவுக்கு வேறு இராஜதந்திர பதவி ஏதாவது வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. அதிகாரியாக பதவி வகித்த தயான் திலக்கவும் இவ்வாறு சிறிலங்கா அரசினால் முன்னர் மீள அழைக்கப்பட்டமையும் அதன் பின்னணியில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம செயற்பட்டமையும் தற்போது மூவருமே பதவியில் இல்லாத நிலை காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பாலித கோகன்னவின் இடத்துக்கு வேறொருவரை நியமிக்க சிறிலங்கா முடிவு