Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னநீராவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்- விஜயகுமாரி தம்பதிகளின் மூத்த மகன். நான்கு இளைய சகோதரர்கள். கவிதரன் (வயது 12), தசிந்தன் (வயது 10), கோகுலன் (வயது 7) , துளசிகா (வயது 5) ஆகியோரே அவர்கள் .

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது வீடுகள், சொத்துக்கள் ஆகியவற்றை விட்டு விட்டுப் புகலிடம் தேடி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு சென்றிருந்தனர். அங்கு தகப்பன் சிவகுமார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இடப்பெயர்வு, முகாம் வாழ்க்கை ஆகியவற்றைத் தொடர்ந்து ஒருவாறு சொந்த இடத்தில் மீண்டும் மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றது இக்குடும்பம்.

ஆனால் வாழ்வாதாரம் இல்லை. வருமானம் இல்லை. இந்நிலையில் தான் குடும்பத்தைக் காப்பாற்றப் பள்ளிப் படிப்பை உதறி இருக்கின்றார். கிடைக்கின்ற வேலைகளைச் செய்து நாளாந்தம் கிடைக்கின்ற கூலிப் பணத்தைத் தாயாரிடம் கொடுக்கின்றார்.

அப்பணம் அக்குடும்பத்தின் ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட போதாது. அவருக்கு அன்று கூலி வேலை கிடைக்காவிட்டால் முழுக் குடும்பமுமே பட்டினிதான். சகோதரர்களின் பள்ளிச் செலவுகள் மறுபக்கம்.

மூத்த மகனின் பள்ளிப் படிப்பு பாழாகிப் போய் விட்டதே, அவனது உழைப்பில் சாப்பிட வேண்டி ஏற்பட்டு விட்டதே என்பது தாயாரின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கவலை.

ஏனைய பிள்ளைகளின் படிப்பும் குழம்பிப் போய் விடுமோ என்கிற பதற்றமும் கூடவே உண்டு. அவரது குடும்பத்துக்கு எதிர்காலம் என்று ஒன்று உண்டா? என்றும் அடிக்கடி நொந்து கொள்கின்றார்.




மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to குடும்பத்தை பொறுப்பேற்று நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும் 15 வயது சிறுவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com