இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் 1990 ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தங்கியிருந்த வேளை இராணுவத்தினரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களை அவர்களது உறவினர்கள் நேற்று 20 வது ஆண்டாக நினைவு கூர்ந்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தமது உறவுகளை நினைவு கூர்ந்து சிலரும், காணாமல் போயுள்ள தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்னும் சிலரும் ஆலயங்களிலும் வீடுகளிலும் நடை பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்கள்.
1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இதே காலப் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் பெற்றமையினால் அப்பல்கலைக்கழகம் அகதி முகாமாக மாறியது.
அகதி முகாமில் தங்கியிருந்தவர்களில் குடும்பஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 174 பேர் செப்டம்பர் 5 மற்றும் 23 ஆம் திகதிகளில் இராணுவத்தினரால் விசாரணைக்கு எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போயிருந்ததாக உறவினர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களைப் பொறுத்த வரை உயிருடன் இருக்கலாம் என உறவினர்களில் ஒரு சாரார் இன்னமும் நம்பிக்கை கொண்டிருந்தாலும் மற்றுமொரு சாரார் இப்போது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன் ஆலயம் அகதி முகாம்கள் மற்றும் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி சம்பவங்களின் போதும், தனித் தனிச் சம்பவங்களிலும் நூற்றுக் கணக்கானோர் பல்வேறு சந்தரப்பிங்களில் காணாமல் போயுள்ளார்கள்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to உறவுகள் காணாமல் போய் 20 ஆண்டுகள் நிறைவு: இன்னமும் காத்திருக்கும் பெற்றோர்