என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே... ஜெனீவா வரை நடந்தே சென்று இலங்கை இனவெறி அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரியும், சிறைகளில் சித்ரவதைபடும் தமிழர்களை விடுவிக்க கோரியும் சிவந்தன் மேற்கொண்ட நடை வேள்வியை மாபெரும் எழுச்சியாக நடத்தி கொடுத்த என் தமிழ் சொந்தங்களே.
இதோ தமிழ் உணர்வுள்ள வீர மறவர்கள் ஜெகன், வினோத், வீர தமிழ் பெண் தேவகி குமார் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தங்களின் நடை வேள்வியை மேற்கொண்டுள்ளனர்.
ஓடாத மானும் போராடாத மனிதனும் வெல்ல முடியாது நம் தமிழ் தேசிய தலைவன் நம் நரம்பு வாய்க்கால்களில் ஓடும் ரத்தத்தில் ஊட்டிவிட்ட உணர்வு, அந்த உணர்வை கண்டுதான் கலப்பின சிங்களன் இன்றும் அச்சம் கொள்கிறான்.
எதிரிகளிடம் ஆயுத பலம் உண்டு, ஆட்பலமுண்டு, ஆதரவளிக்கும் நாடுகளும் உண்டு, நாம் தனித்து நின்று போராடுகிறோம், எமக்கு எந்த நாட்டின் உதவியும் இல்லை அனால் எமக்குள்ள ஒரே பலம் எமது ஆத்மா பலம்தான் என்று தமிழ் தேசியத்தின் முகவரியான தலைவன் சொல்லி இருக்கிறார், அவர் கொடுத்த அந்த ஆத்மா பலம்தான் இன்றும் நம்மை எல்லாம் போராட தூண்டுகிறது. அந்த போராட்டங்களின் ஒரு வடிவம்தான் இந்த நடை பயணம்.
சுதந்திரம் இல்லாத மனித வாழ்வில் அர்த்தம் இல்லை என்பதை நன்குணர்ந்த எம் சொந்தங்களே நம் மறவர்கள் நடந்து வரும் பதைஎங்கிலும் அவர்களோடு சேர்ந்து நம் உள்ள உணர்வுகளை வெளிபடுத்துங்கள். நம் போராட்டத்தின் தீபத்தை அணையாமல் பார்த்துகொள்வது உனக்கும் எனக்கும் தலைவன் இட்ட கட்டளை என்பதை மனதில் கொண்டு நம் மறவர்கள் நடந்து வரும் பாதை எங்கிலும் அவர்களை உற்சாக படுத்தும் விதமாக நம் தாயக விடுதலை முழக்கத்தை முழக்குங்கள்.
இந்த நடை வேள்வி ஐரோப்பிய ஒன்றியத்தை அடையும் நேரம் இனவெறி அரசுக்கு குற்றவாளி கூண்டு தயாராகிவிடும் என்பது உறுதி இழந்த மண்ணை மீட்டெடுக்கவும் ,இழந்த சொந்தங்களின் கனவான தமிழ் ஈழத்தை வென்று எடுக்கவும் உங்கள் உளப்பூர்வமான ஆதரவை நடை பயணத்துக்கு தரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் நன்றி.
சிபிச்சந்திரன்
திரைப்பட இயக்குனர்
நாம் தமிழர் தலைமை பேச்சாளர்
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நீதிப்பயணத்திற்கு நாம் தமிழர் வாழ்த்து