Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2010ம் ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு உதைபந்தாட்டம் போட்டியின் இறுதிப் போட்டிகள் 12-09-2010 ஞாயிற்றுக்கிழமை பி. 1 மணிக்கு வழமையான (FAVORITA) மைதானத்தில் நடைபெற்றது.

ஈழத்தமிழர் வி.சம்மேனத்தில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கிடேய நடாத்தபட்டா போட்டியில் இறுதிப் போட்டிக்கு 3 கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன. 3ம் இடத்தை இளைய நட்சத்திரக் கழகம் பெற்றிருந்த வேளையில் 1ம்-2ம் இடத்துக்கான போட்டிகள் அன்புப்பறவைகள் வி.கழகத்திற்கும் இளம் சுடர்கள் . கழகத்திற்கும் இடம் பெற்றது போட்டி நிறைவு பெறும் வரை யாரும் goal அடிக்காததினால், உதைமுலம் தெரிவு நடைபெற்றது.

இதில் இளம் சுடர்கள் வி.கழகம் முதலாம் இடத்தையும், அன்புப்பறவைகள் வி.கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றது.

தொடர்ந்து வெற்றிபெற்ற கழகங்களுக்கான மாவீரர் நினைவு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. சிறந்த விளையாட்டுவீரர் - சிறந்த பந்து காப்பாளருக்கான பரிசும் வழங்கப்பட்டது.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம் போட்டியில் பண்டாரவன்னியன் + சங்கிலியன் கழகங்களுக்கிடையே போட்டி நடைபெற்து. பண்டாரவன்னியன் கழகம் வெற்றிபெற்றது.

பெண்களுக்கான சங்கீதக் கதிரை விளையாட்டும் நடைபெற்றது வெற்றீ பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு தாரகமந்திரம் உச்சரிக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இத்தாலியில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு உதைபந்தாட்டம் போட்டி 2010

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com