மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிவிபத்துச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் 60பேர், சீனர்கள் இருவர்கள் உட்பட்ட எழுபத்தைந்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்த பாரிய பார ஊர்தி ஒன்றில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதனை அடுத்து அதன் அருகாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றைய இரண்டு வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்த பாரிய பார ஊர்திகளும் வெடித்துச் சிதறியுள்ளன.
வெடிப்பு நிகழ்ந்த வேளை குறித்த பொலிஸ் நிலையத்தில் 68பொலிஸார் பணியில் இருந்துள்ளனர்.
அவர்களில் 60பேர் கொல்லப்பட்டபோதிலும் அறுவரது சடலங்களே மீட்கப்பட்டதாகவும் ஏனையவை சிதறியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு கொல்லப்பட்ட சீன நாட்டவர்கள் இருவரும் வீதிப் புனரமைப்புப் பணிக்காக மட்டக்களப்பு வந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
ஏனைய பொலிஸார் அறுவரும் உடல் கருகி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொலிஸ் நிலையத்திற்கு அருகான பகுதியில் இருந்த பெருமளவானோரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எழுபத்தைந்திற்கும் அதிகம் என்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லுடைக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளே குறித்த வாகனங்களில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிப் புனரமைப்பிற்காக கல்லுடைக்கப் பயன்படுத்தப்படுகின்ற வெடி மருந்துகளை பொலிஸாரின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதே நடை முறை என்பதாலேயே வெடிமருந்துகள் அங்கு வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

தமிழ் மக்களின் பாபம் சும்மா விடுமா, மேலும் மேலும், இது போன்ற நாசங்கள் சிங்களவனுக்கு, இறைவன் வழங்குவார்.