Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி மாவட்டத்திற்கு கோட்டா முறையில் மாணவர்களுக்கு கிடைத்து வந்த வசதிகளை இல்லாமல் செய்வதற்கான திரைமறைவு வேலைகள் நடந்து வருகின்றன என கடந்த செவ்வாய்க்கிழமை பளை மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .சரவணபவன் குற்றஞ்சாட்டினார்.

போர் முடிந்த பின்னும் தமிழ் இனத்தின் மீது பல்வேறு வழிகளில் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக தமிழ் மக்களின் மிகப்பெரிய சொத்தான கல்வியையும் ஒடுக்க முயற்சிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.

குறிப்பாக பின் தங்கிய மாவட்டமாகக் கணிக்கப்பட்டு வந்த கிளிநொச்சிக்கு கோட்டா முறையில் மாணவர்களுக்கு கிடைத்து வந்த வசதிகளை இல்லாமல் செய்வதற்கான திரைமறைவு வேலைகள் நடந்துவருகின்றன.

பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை, கற்றல் உபகரணங்களைக் கையளித்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தவை வருமாறு;

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வெட்டுப்புள்ளி முறையும் ஒரு பிரதான காரணம். இந்த வெட்டுப்புள்ளி முறை மூலம் பெரும்பான்மை இனத்தவர்கள் எந்தெந்த இலக்குகளை அடைய விரும்பினார்களோ அவற்றை அடைந்துவிட்டனர்.அதனால் இப்போது வெட்டுப்புள்ளி முறையை நீக்க அவர்கள் விரும்புகின்றனர்.

இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது கிளிநொச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்கள்தான். பின்தங்கிய மாவட்டங்களுக்கு கிடைத்துவந்த கோட்டா முறையிலான பல்கலைக்கழக அனுமதி,வேலைவாய்ப்பில் சலுகைகள், அபிவிருத்திதிட்டங்கள் போன்றன கிட்டாமல் போகும் அபாயநிலை உருவாகியுள்ளது.

அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் மாத்திரமே எமது இனத்தின் ஒட்டு மொத்தத் தேவை என்பது போல சிலர் காட்ட முற்படுகின்றனர்.தமிழினத்தின் அரசியல் எதிர்காலத்தை மழுங்கடிக்கவே அவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். கூடவே எமது இளம் சமூகத்தினரின் அரசியல் ரீதியிலான சிந்தனைகளையும் ஒடுக்கிவருகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் கூட அரசியல் சார் கருத்துக்களைப் பேச முடியாதவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதால், எமது இருப்புக்காக இன்னொருமுறை உரத்துக் குரல் கொடுக்க முடியாத- அரசியல் ரீதியாகவேனும் போராட முடியாத- நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

பளை மத்திய கல்லூரியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. ஒழுங்கான வகுப்பறைகளோ, மண்டபங்களோ, ஆய்வு கூடங்களோ எதுவும் இல்லை. இங்குள்ள ஒரேயொரு கிணறுகூடப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

தென்பகுதியில் சிறு பாடசாலை ஒன்று கொண்டுள்ள சராசரி வசதிகள் கூட இந்தக் கல்லூரியில் இல்லை.அப்படியிருந்தும் ,விடாமுயற்சியோடு இயங்கிவரும் கல்லூரியைப் பார்க்கும் போது பிரமிப்பாகவேயுள்ளது.

இன்னும் ஒரு மாதத்துக்குள் பளை மத்தியகல்லூரிக்கு நீரிறைக்கும் இயந்திரம் ஒன்றை வழங்கவுள்ளேன். என்றார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கிளிநொச்சி மத்திய கல்லூரியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை: சரவணபவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com