Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால் அகதிகளாகியுள்ள தமிழர்கள், அங்குள்ள பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்தியா அளித்துள்ளது.

கடந்தாண்டு மட்டும் 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இதுதவிர, விவசாயப் பணிகளுக்கான உதவிகள், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாகவும் இந்தியா உறுதி அளித்துள்ளது.

இந்த மறு வாழ்வுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். 31.08.2010 அன்று வவுனியாவுக்கு சென்ற நிருபமா, செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாமுக்கு காரில் சென்றார்.

அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை நிருபமா ராவ் சந்தித்து பேசினார். முகாமில் உள்ள வசதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர், ஈழத் தமிழர்களுக்காக, முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக உள்ளது என, உறுதி அளித்தார்.

பின்னர், வவுனியாவுக்கான அரசு ஏஜெண்டை நிரூபமாராவ் சந்தித்துப் பேசினார். தமிழர் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

கிளிநொச்சிக்கு சென்ற நிருபமாராவ், அங்கு மறுகுடியமர்த்தப்பட்டு உள்ள ஈழத் தமிழர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு, உபகரணங்கள், சிமெண்ட் மூட்டைகள், மேற்கூரை ஷீட்கள் ஆகியவற்றை வழங்கினார். ஓமந்தையிலும் அவர் உபகரணங்கள் வழங்கினார். பின்னர் நிருபமாராவ் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். பொதுநல அமைப்புகளின் தலைவர்களை சந்தித்த அவர், போருக்கு பிந்தைய நிலவரத்தை கேட்டறிந்தார். சவால்களை சமாளிக்க இலங்கை அரசுடன் இந்தியா துணைநிற்கும் என்று கூறினார்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளால் கட்டப்பட்ட 3 பதுங்கு குழிகளையும் நிருபமாராவ் பார்வையிட்டார்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஈழத் தமிழர்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது: நிருபமா ராவ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com