Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட யாழ் நகர் கிழக்குப் பிரதேசமான மணிப்புரி, உதயபுரம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

எனினும், அப்பகுதிகளில் இடம்பெயர்வுக்கு முன்னர் நீண்டகாலமாக வசித்து வந்த பல குடும்பங்கள் தற்போது அங்கு வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் இடம்பெயர்வுக்கு முன்னர், காணிகளில் வசித்து வந்தவர்கள் அக்காணிக்குரிய உறுதிப்பத்திரங்களை உரியமுறையில் பெற்றுக்கொள்ளத் தவறியிருந்ததன் காரணமாக தற்போது தங்கள் காணிகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. காணிக்கான உறுதியுள்ளவர்கள் மட்டுமே அவர்கள் காணிகளுக்குள் சென்று குடியமர அனுமதிக்கப்படுவதாகவும், ஏனையவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அங்கு இடம்பெயர்வுக்கு முன்னர் வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்விடங்களைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை தங்கள் காணிகளில் குடியமர்ந்திருக்கின்றஉறுதிப்பத்திரமில்லாதமக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறுமாறு பிரதேச செயலாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வெளியேற மறுக்கும் சர்ந்தப்பத்தில் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் தம் வாழ்விடம் நோக்கிய எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் உள்ளனர். இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுத்து உரியமுறையில் மக்களுக்குரிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மணிப்புரி, உதயபுரம், வசந்தபுரம் பகுதி மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com