தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணியான திரு பாலித பெர்னாண்டோ அவர்களுக்கும் பா.அரியநேத்திரன் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள திழ் அரசியற் கைதிகள் 765 பேரின் விடுதலை தொடர்பாக கடந்த 2010.07.24ம் திகதி அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் திரு.ஏ.வீ.ஜனாதர அவர்களால் கடந்த 2010.08.12ம் திகதி நீதி அமைச்சின் செயலாளர் திரு.சுகத கம்லத் அவர்களின் கவனத்திற்கு கொண்ட வந்த விடயத்தை குறித்த நீதி அமைச்சின் செயலாளர் கடந்த 2010.08.18ம் திகதி தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இந்த அரசியற் கைதிகளில் 115 பேர் நியு மகசின் சிறையிலும் 18 பேர் வெலிக்கடைச் சிறையின் ஆண்கள் பிரிவிலும் 55 பேர் வெலிக்கடைச் சிறையின் பெண்கள் பிரிவிலும் 340 பேர் கொழும்பு விளக்கமறியற் சிறையிலும் 26 பேர் நீர்கொழும்பு சிறையிலும் 48 பேர் அனுராதபுரம் சிறையிலும் 27 பேர் வவுனியா சிறையிலும் 30 பேர் யாழ்பாண சிறையிலும் 40 பேர் திருகோணமலை சிறையிலும் 35 பேர் மட்டக்களப்பு சிறையிலும் 16 பேர் போகம்பர சிறையிலும் 15 பேர் பதுளை சிறையிலுமாக 765 பேர் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆவர்களின் உண்மை நிலைபற்றி தங்களுக்கு அறியத்தர நான் விரும்புகின்றேன்.
(அ) இவர்களைக் கைதுசெய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவு (CCD) மற்றும் உள்ளூர் பொலிஸ் நிலையங்கள் ஏயைன விசாரணைப் பிரிவுகள் தங்கள் விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்துவதில் தாமதம் காட்டுகின்றனர்.
(ஆ) சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள சட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாக உள்ளது.
(இ) இவ்விவகாரம் இலங்கையிலுள்ள வழக்கமான நீதிமன்றச் செயற்பாட்டிற்குட்படுத்தப்படுவதால் தாமதம் ஏற்படுகின்றது.
(ஈ) இலங்கையிலுள்ள அரசியல் கைதிகள் மற்றும் புலிகள் இயக்க சந்தேப நபர்களின் விவகாரத்தை “தனியான சிறப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி” செயலாற்றுவதன் மூலம் மேற்படி தாமதங்களை தவிர்க்க முடியும்.
(உ) விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நான்கு விதமாக பிரித்துப் பார்க்கலாம்.
1. குற்றமற்றோர் மற்றும் குற்றம் சுமத்தப்படாதோர்.
2. ஒப்புதல் வாக்குமூலமளித்தும் சட்ட நடவடிக்கையின்றி இருப்போர்.
3. குற்றம் சுமத்திய பின்பும் வழக்கு விசாரணையின்றி இருப்போர்.
4. பல ஆண்டுகள் முடிவின்றி தொடரும் வழக்கு விசாரணைணை எதிர்கொள்வோர்.
குறிப்பிட்ட நான்கு பிரிவுகளிலும் மூவினங்களையும் சேர்ந்த இளைஞர்கள்இ வயோதிபர்கள்இ குழந்தைகளுடன் தாய்மாரும்இ அங்கவீனர்கள்இ மனநோயாளிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த 765 பேருக்கு மேற்பட்டவர்கள் இலங்கையில் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.
2009ம் ஆண்டு இறுதிப் பகுதியில் நீதி அமைச்சினாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் 2009ம் ஆண்டு நீதி அமைச்சினால் இவ்விவகாரம் தொடர்பாக மூன்று அம்சத்திட்டமொன்று பகிரங்கமாக ஊடகங்கள் மூலமாகவும் நேரடியாகவும் இவர்களுக்கு வாக்குறுதியாக வழங்கப்பட்டது. அதாவது.
1. குற்றமற்றோர் மற்றும் குற்றம் சுமத்தப்பட முடியாதோருக்கு விடுதலை
2. புலி இயக்க உறுப்பினர்களுக்கு புணர்வாழ்வு (கைது செய்யப்பட்ட)
3. குற்றம் சுமத்தப்படுவோருக்கு பிணை அனுமதியுடன் சட்ட நடவடிக்கை.
இதுவே அரசினால் அறிவிக்கப்பட்ட மூன்று அம்சத் திட்டம். இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான உயர் அதிகாரிகளான பாதகாப்பு அமைச்சின் செயலாளர்இ நீதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், பிரதம நீதியரசர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு அரசினால் நியமிக்கப்பட்டது. இவர்கள் அரசியல் கைதிகளின் விவகாரத்தை ஆராயவென நியமிக்கப்பட்டார்கள்.
சட்டமா அதிபரின் பணியை துரிதப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தால் விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று அமைக்கப்பட்டதாக கடந்தகாலங்களில் அரசினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எதுவித முன்னேற்றங்களும் செயற்பாடுகளும் காணப்படவில்லை என்பதனால் கடந்த 2010.01.05 முதல் 2010.01.15 வரை தங்கள் உரிமைகளை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டுமென நாடளாவிய ரீதியாக பல்வேறு சிறைகளிலுமுள்ள கைதிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து சாத்வீக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். அக்கோரிக்கைகளாவன.
1. பொது மன்னிப்பு வழங்கவும்
2. பிணையில் செல்ல அனுமதிக்கவும்
இப்போராட்டத்தின் உச்சநிலை காரணமாக அரச தரப்பு பிரதிநிதிகளாக அப்போதைய நீதி அமைச்சின் ஆலோசகரான திரு.ராஜன் ஆசீர்வாதம் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் D.R.D.சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தோர், பிரபா கணேசன் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரான வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்தனர்.
இதன்போது அரச தரப்பு பிரதிநிதிகளால் சட்டமா அதிபரோடு கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசப்பட்டுள்ளதாகவும் அதன்போது சட்டமா அதிபரினால் குற்றமற்றோரை விடுதலை செய்வதாகவும் வழக்குகளுக்கு முகம்கொடுப்போருக்கு பிணையில் விடுதலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று அரச தரப்பு பிரதிநிதிகளால் கூறப்பட்டது.
இதன்போது கைதிகள் தரப்பிலிருந்து கடந்த காலங்களில் பலவிதமான உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தபோது அரசதரப்பால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே எமது கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நாம் இப்போராட்டத்தை தொடர்வதாக கூறிய இக்கைதிகள் இதன் மறுநாள் மன்னார் மறைமாவட்ட ஆண்டகை நேரடியாக சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தான் சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருடன் கதைத்ததாகவும் உங்களின் பிரட்சினைகளுக்கு மூன்று மாதத்திற்குள் தீர்வு காண்பதாகவும் அவர்கள் தன்னிடத்தில் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் எனவே நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று கைதிகளிடம் கூறினார். இவ்விடயத்தை செவிமடுத்த கைதிகள் தற்காலிகமாக இவ்வுண்ணாவிரதத்தை கைவிடுவதாக கூறினர்.
ஆனால் இவ்வாக்குறுதி வழங்கப்பட்டு சுமார் 10 மாதங்கள் கடந்தும் அனைத்து விடயத்திலும் தாமதம் தொடர்கிறது அதாவது நீண்டகாலமாக விளக்க மறியலில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடயத்தில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை.
பிணை அனுமதியும் அதன் நியாயத் தன்மையும்
கடந்த காலங்களில் பிணை வழங்க முடியாதென்று அரசாங்கத்தால் சில காரணங்கள் கூறப்பட்டது ஆனால் தற்போது அச்சூழ்நிலைகள் இல்லை. அதற்கான வலுவான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றது.
1. அரச கட்டுப்பாடற்ற பிரதேசமென்று இன்று எதுவுமில்லை.
2. இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இயல்பு வாழ்க்கை மற்றும் அச்சுறுத்தல் அற்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
3. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் (இருப்பதற்கு சாட்சியம்) இல்லை.
4. சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதாக சர்வதேசம் அறிவித்தது.
5. அமைச்சர்களும் அரச அதிகாரிகளும் எதுவித அச்சுறுத்தலுமின்றி எல்லாப்பிரதேசத்திலும் பயணமாற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி தலமையிலான அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் கடந்த 14.07.2010 திகதி புதன்கிழமை முதல் தடவையாக நடைபெற்றது. இவையெல்லாம் இன்று தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்கள்.
வடக்கு கிழக்கு நீதி மன்றங்களில் குறித்த குற்றச்சாட்டிற்குள்ளானோருக்கு பிணை வழங்கப்பட்டபோதும் அதே விதமான வழக்குகளில் கொழும்பு உட்பட தெற்கிலுள்ள நீதி மன்றங்களில் பிணை வழங்குவதில்லை இது ஏன்?
ஆனால் கொழும்பில் தயா மாஸ்ரர் ஜோஜ் மாஸ்ரர் ஆகியோருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு 23.08.2010 அன்று பிணை வழங்கப்பட்டது. இவர் துப்பாக்கி மற்றும் பெடிபொருட்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதே போன்று தரப்பட்ட தண்டனையை எதிர்த்து மேன் முறையீடு செய்த பத்திரிகையாளர் திசைநாயகத்திற்கு பிணை அனுமதிக்கப்பட்டு பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இவரும் வயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பல வருடங்களாக இந்த அரசியற் கைதிகள் தொடர்ந்தும் விடுதலை இன்றி உள்ளனர். அதிலும் மிகவும் வேதனையான விடயம் யாதெனில் கைக் குழந்தைகளுடன் ஐந்து தாய்மார்கள் உட்பட மொத்தமாக 55 பெண்கள் பரிதாபகரமான நிலையில் சிறையில் கஸ்ரப்படுகின்றனர்.
இவ்விதமாக அரசியல் கைதிகள் அனைவருக்கும் சட்ட நடவடிக்கைக்கு முன்னர் பிணை அனுமதிக்கப்பட வேண்டும் அத்துடன் இது இலகு பிணையாக அமைய வேண்டும். குழந்தைகளுடன் இருக்கும் தாய்மாhகள்; வயோதிபர்கள் சுகயீனமுற்றோர் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அரசியல் கைதிகள் அனைவரும் தமது குடும்பங்களுடன் மீள்இணைய அனுமதிக்கப்பட வேண்டும். அரசு விரும்பும் நல்லிணக்கம் உருவாவதற்கு நல்லெண்ண நடவடிக்கையாக அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கி பொது மன்னிப்பும் வழங்க அரசு முன்வர வேண்டும். இவர்கள் விடயத்தில் தாங்கள் மனிதாபிமான ரீதியிலாவது உண்மை நிலையை உணர்ந்து மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்ட சென்று விடுதலை வழங்க ஆவன செய்யும்படி பணிவுடன் வேண்டுகின்றேன்.
விடுதலை செய்ய முடியாதவிடத்து பிணையிலாவது அவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிணை வழங்க தாங்கள் சம்மதிக்கும் போது அதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என்பதனையும் தங்களின் மேலான கவனத்திற்கு தர விரும்புகின்றேன்.
நன்றி.
உண்மையுள்ள
பா.அரியநேத்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பு
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: அரியநேத்திரன் மகஜர்