Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்கள் விடுதலைப் போராட்டம் நீண்ட காலமாக, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு எதிர்ப்புகளையும், சவால்களையும் அழிவுகளையும் சந்தித்த போதிலும் புதிய வடிவங்களில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நெருக்கடி நிறைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏராளமான உணர்வாளர்கள் பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்து தமிழ் மக்களின் சிறந்த வாழ்வுக்காக உழைத்திருக்கிறார்கள். அதேபாதையில் இனிவரும் காலங்களிலும் ஆயிரமாயிரம் உணர்வாளர்கள் நிமிர்ந்து நின்று இலட்சியத்திற்காக உழைப்பதற்கு இங்கு சித்தமாக இருக்கிறார்கள்.

இவர்கள் பற்றி விமர்சிப்பவர்களும்;, இவர்கள் மீது குற்றம் சாட்டுபவர்களும் மேற்சொன்ன விடயங்களை முதலில் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

எவ்வகையிலும் ஆதாரமற்ற செய்திகளையும், விமர்சனங்களையும், வதந்திகளையும் தத்தமது விருப்புக்கேற்றவாறு வெளியிட்டு, தனிப்பட்ட நலன்களுக்காக எதிரியின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுச்சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, அர்ப்பணித்து, பாரிய சவால்களைச் சந்தித்து விடுதலைக்கு உரமூட்டிய உணர்வாளர்கள், மற்றும் செயற்பாட்டாளர்கள் உலகப் பரப்பில் அனைத்துத் திக்கிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தி, மனங்களைக் காயப்படுத்தி தேசிய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பதை இன்றைய நாட்களில் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாறாக, தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காது, சமூக கட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தாது பார்த்துக் கொள்வது ஊடகங்களின் புனிதமான கடமை.

சவால்களை சமூகம் சந்திக்கும் இன்றைய வேளையில் எங்கள் மக்களுக்கு உறுதியான ஆதரவு வழங்கி கட்டக்கோப்பு குலையாமலும் ஊடகத் தன்மையை களங்கப்படுத்தாமலும் பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆசிரியர் தலையங்கம்
‘கனடா உலகத்தமிழர்’
17-10-2010

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அன்பார்ந்த ஊடக நண்பர்களுக்கு: கனடா உலகத்தமிழர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com