அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர்.
இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திய இவர்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கிளைமோர் வெடித்ததினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
திருகோணமைலைத் துறைமுக வாசலில் வைத்து 15.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகு மீதான கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.(15.09.2010)
இம் மாவீரர்களுக்கு VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.





மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to 3ம் ஆண்டு வீரவணக்கம் நாள்: பவமாறன், அயோனி, மிதுலன், எரிமலை