செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக மகிந்த அமெரிக்கா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர் வருகை தருவாரானால் இலங்கைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அவரை விசாரணை செய்ய வேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
“இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றிக் படுகொலைசெய்யப்பட்டனர். இவற்றை மூடி மறைத்து சுயாதீன சர்வதேச நீதி விசாரணைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ள கனடியத் தமிழர் தேசிய அவை, ஐ.நாவையும் அதன் விசாரணை முன்னெடுப்புக்களையும் அவமதிக்கும் மகிந்த ராஜபக்சவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிப்பதே மிகப் பெரும் தவறு என்றும் கூட்டுக்காட்டியுள்ளது.
‘சனல் 4’ காணொளிகள் சித்திரவதைகளையும் படுகொலையையும் நிரூபிக்கின்றன. டப்ளின் மக்கள் ஆணையம் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை நிறுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் செயலாளர் போர்க்குற்ற விசாரணைக்கென நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார்.
இந்நிலையில் சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான போர்க்குற்ற விசாரணையை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா சபைக்கூட்டத் தொடரில் அவர் கலந்து கொண்டால் அவருடனான அனைத்து ராஐதந்திர தொடர்புகளையும் அங்கு தவிர்க்குமாறு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் கனடியத்தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆவர்வளர்கள் அனைவர் சார்பிலும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்விடயங்களை வலியுறுத்தும் வகையிலும், அமெரிக்க அரசை இவ்விடயத்தில் முதன்மை பங்கை வகிக்குமாறு வலியுறுத்தியும் கனடியத் தமிழர் தேசிய அவை செப்டெம்பர் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு ரொறன்ரோவில் (360 University Ave) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னாலும், மொன்றியலில் (1155 rue St-Alexandré - Corner Of St-Alexandré & Rene Levesque ) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னலும் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்தவுள்ளது.
இதில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் உரிமையுடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு
தொலைபேசி இல: 1866 263 8622 Ext 101
மின்னஞ்சல் முகவரி: info@ncctcanada.ca
*****************************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஐ.நா சபைக்கு வரும் மகிந்த மீது போர்க்குற்ற விசாரணை நடத்து: கனடியத்தமிழர்கள்