Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சிறீலங்கா அரசு அமெரிக்காவை கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள 18 ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்தை சீரழிக்கும செயல் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. சிறீலங்கா தொடர்பில் அமெரிக்கா கண்டனம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது இதுவே முதல் தடவை என கூறலாம்.

முன்னயை சந்தர்ப்பங்களில் கவலைகளை மட்டுமே அமெரிக்கா தெரிவிப்பதுண்டு. ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு எதிராக சிறீலங்கா அரசு இன்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேவையற்ற விதத்தில், பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதையும், சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேவையற்ற அறிக்கைகளை சிறீலங்கா அரசு கருத்தில் எடுக்காது. அமெரிக்கா முதலில் தனது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளட்டும். அமெரிக்கா அறிக்கைகளை விடுக்கும் முன்னர் எமது அரசியல் யாப்பு மாற்றங்களை படிக்க வேண்டும்.

நாம் அமெரிக்காவுக்கு எமது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் சட்டபூர்வமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்தவேண்டும்: சிறீலங்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com